உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

பாரதிக்குப் பின்

புஷ்டிச்ச தேசமும், கைகளும் நெஞ்சும், அவன் காக்கி நிக்கரும் உடுப்பும், கோவிந்தன் கல்லுளி மங்கன் தான்; அனாலும் நல்ல மனசொள்ளவன். நண்ணி உள்ளவள். அவன் வேலையெல்லாம் தீந்து வந்திருந்தான். அவன்பாடு ராஜகாரியம்.”

கோவிந்தனும் சாலைப் பட்டாணியும் பேசுகிற சம்பாஷணையில் கேரளத் தமிழின் தன்மையைக் காணலாம்—

“நீரும் அந்த செம்மாடிகளுக்கு ஒற்றைக்கு ஒற்றை சொல்லுதினாலே தானே—அவனுகளும் கூத்து காண உம்மைப் போட்டு கொமைக்கான். அவனுக ஒண்ணெ சொன்னா செவி கேக்கலேண்ணு போயிர வேண்டியது தானே.”

“இத்தரையும் நாளு அப்படி பளகலியே கோவிந்தா. எப்படிப்பட்டவன் நான் எப்பிடி இருந்தவன் நான். காலை கடையிலே என்னைக் காட்டியும் வலிய ஊச்சாளி ஆரு இருந்தா? எனக்கு ஆனகாலத்திலே இந்த மாதிரி ஒரு சுண்டைக்காய் மோன் நேரிலே வந்து நிப்பானா? இப்போ வாய் அறைக்காமெ சாளப் பட்டாணிண்ணு நடுரோட்டிலே நிண்ணு கூப்பிடுதான். பொறுக்கல்லே எனக்கு.”

“நீருகெடந்து வெட்ராளப் படாமெ கெடயும். எட்டு நாளத்தெ பாடும் போவட்டும். ஒரு பச்சே இந்த எட்டு நாளத்தெ மருந்து குத்தி வைப்பினாலே, கை நீரும், வலியும் பழுப்பும் கொறையும், கொஞ்சம் சமாதானமாக இரியும்.”

இவ்வாறு ‘சாலை பஜார்’ தமிழ் ஒலிக்கும் கதைகள் பலவற்றை மாதவன் எழுதியிருக்கிறார். அவருடைய ‘புனலும் மணலும்’ நாவலிலும் உழைப்பாளிகளின் பேச்சில் அடிபடுகிற மலையாளத் தமிழை அவர் திறமையாக எடுத்தாண்டிருக்கிறார்.