உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் உரைநடை

199

மில்லாத வளர்ச்சி. பரந்த முகம். தேவையே ஆன சிரிப்பு...எண்ணும் தோறும் உள்ளே ஊறிக் கொண்டு வருகிறது, விவரிக்க முடியாத மனச் சபலம்.”

“கார்த்தி படியிறங்கி வந்து கொண்டிருந்தாள். இவளா கார்த்தி?

பாதத்தைத் தொடுகிறது பின்னல். கேவலம் இந்த உபநடிகைக்கு நெற்றியில் அந்த குங்குமப் பொட்டு எவ்வளவு அழகாக ஜ்வலிக்கிறது. எத்தனை பேர் அழிய அழிய இட்ட பொட்டோ? கண்ணும் பேசுகிறது. உதடும் பேசுகிறது. இதற்கெல்லாம் தானே அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். மணக்க மணக்க அத்தர் பூசிக் கொண்டு வரும் செருக்குக்கும், வழிய வழிய வெற்றிலை குழப்பிக் கொண்டு வரும் அழுமூஞ்சிக்கும், சிரிக்கச் சிரிக்க புகை ஊதிக் கொண்டு வரும் அலட்சியத்திற்கும் இந்த அழகு அர்ச்சித்து எறியப்படுகிறதே...தூ!” (மோக பல்லவி)

சொற்கள் உயிர் பெறும்படியான உணர்ச்சிக் சித்திரிப்பு என்பார்களே, அந்த ரகமான ஜீவசித்திரங்களை மாதவன் தனது கதைகளில் உருவாக்கியிருக்கிறார். அதற்கு அவருடைய எளிய, இனிய உரை நடை துணைபுரிகிறது.

ஒரு பெண்ணின் மனநிலையை அவர் வர்ணிக்கிற விதம் இது.

“முப்பத்து ஐந்து வயது வரையில் அம்மா துணையுடன் மட்டும் வாழும் ஒரு பெண். நான் எட்டிப் படர்ந்துகொள்ள எனக்கு எதுவும் தேவையில்லை. ஆனால் நான் என் தேவைகளையும் வளர்ச்சிகளையும் உணர்கிறேன். இரவில் தனிமை எனக்கு குளிராக இருக்கிறது. உறக்கத்தில் கனவு எனக்குத் தீயாக இருக்கிறது. விழிப்பின் அர்த்தம் எனக்கு புதிராக இருக்கிறது. நடையின் அழுத்தம் எனக்கு மலையாக