202
பாரதிக்குப் பின்
ரயில் ‘ழே’ என்று கூவிவிட்டு உபரி நீராவியைக் கக்கிவிட்டுக் கிளம்பியது. அந்தப் பெண் ரயிலுடன் ஓடினாள். காசு கொடுக்காத அந்தப் பிரயாணி அவள் மார்பு குலுங்க ஓடி வருவதை ரசித்துக் கொண்டே சில்லறையை விட்டெறிந்தான். அவள் காசைப் பொறுக்கிக் கொண்டு, வீசி எறிந்தவனை நோக்கி ‘தத்’ என்று துப்பினாள்.”
இது சுஜாதா எழுதிய ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ நாவலின் ஆரம்பம்.
இந்த நாவல், வாரப் பத்திரிகையில் தொடர்கதையாக வந்து கொண்டிருந்த போதும் சரி; புத்தகமாகப் பிரசுரமாகி விற்பனைக்கு வந்த போதும் சரி—மிக அதிகமான வாசகர்களின் ரசிப்பையும் பாராட்டுதலையும் பெற்றது.
படித்தவர்கள் பலரும் சுஜாதாவின் கதை சொல்லும் திறனையும், கதையில் எடுத்தாண்ட விஷயத்தையும், இதர பல நயங்களையும் ரசித்து வியந்து எடுத்துச் சொல்லி மகிழ்ந்தார்கள். சுஜாதாவின் கதைகளால் வசீகரிக்கப்பெற்ற ரசிகர்கள் அனைவரும் அவருடை வசன நடையைப் பாராட்டிச் சொல்லவும் தவறவில்லை.
சுஜாதா (எஸ். ரங்கராஜன்) ஜனரஞ்சகமான கதைகளையே எழுதுகிறார். கொலை, கொள்ளை, கடத்தல் வேலை, மர்மம், துப்பறிதல், பெண் தொடர்பு, பெண் சாகசம் போன்ற விஷயங்களையே அதிகமாகக் கதைகளில் எடுத்தாள்கிறார். விஞ்ஞான விஷயங்களையும் ஓரளவுக்குக் கலந்து கொடுக்கிறார்.
அவருடைய கதாபாத்திரம் ஒன்று கதையின் நாயகனிடம் ‘எப்படி இவ்வளவு தெரிஞ்சு வெச்சுக்கிட்டிருக்கீங்க!’ என்று ஒரு இடத்தில் குறிப்பிடுவதாக சுஜாதா எழுதியிருக்-