பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை :$ ஸ்டேட்மெண்ட். அடேயப்பா என்ன கண்கள் அடுத்த சில வரிகளை விரயம் செய்து அவள் கண்களை வர்ணிக்கலாம். கறுப்பும் இல்லை; ப்ரெளனும் இல்லை. பிரம்மா அல்லது அவள் பெற்ருேர்கள் தடுக்கி விழுந்த மகத்தான கலவை. மை விளம்பரக்காரர்களின் ஆதர்சம். அவள் உடலின் மற்றப் பகுதிகள் மிகவும் ஈர்ப்புத் தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அந்தக் கண்கள் அதை எல்லாம் வென்று என் கவனத்தைத் தம்மிடமே சுயநலமாக நிறுத்திக் கொள்ளும் இயல்பு பெற்றிருந்தன. சென்ற வாக்கியம் எவ்வளவு இடுமாறுகிறது. பாருங்கள். அவள் கண்கள் தான் காரணம்: (நில், கவனி, தாக்கு!) இது ஒரு ரகம், இன்னொரு விதம் 'அழகாக இருந்தாள். அழகு என்பதற்கு உங்கள் அகராதியில் என்ன அர்த்தம் என்று தெரியாது. என் அர்த்தத்தைச் ச்ொல்கிறேன். அழகு என்ருல் கண் கருப்பு, சடை நீளம், காற்றில் ஆடும் கூந்தல், சின்ன உதடு கள், வரிசையான பற்கள், சிவப்பு உடம்பு, உயரம், வாளிப்பு என்று வார்த்தைகளை வீணடிக்கலாம். வெறும் வார்த்தை கள்: அவை அவள் அழகில் இருக்கும் சலனத்தை, உயிரை வயிற்றுக்குள் திடீரென்று ஏற்படுத்தும் அழுத்தமான பிடிப் புணர்ச்சியை வெளிப்படுத்தாது. சோகம் கலக்காத அழகு அழகே இல்லை-சற்று நிதானமாக வாசிக்கவும். சோகம் என்ருல் தனிமை, இரவு, ஒற்றை ராகம், இனம் தெரியாது நம் மூக்கருகே திடீரென்று தோன்றும் வாசனை என்று எவ்வளவோ சொல்லலாம், புரியவில்லையா? கவனிக்கவும். ஜ்யோவின் உடல் 54. 5-4 என்பது வெறும் எண் . என்னெதிரே நின்றது 5.4 பெண். அவள் உடுத்தியிருந்தது என்னைப்படுத்தியது. உடுத்தாமலிருந்தது.என்னை அவளருகில்