பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

où3 பாதிக்குப் பின் 'ஜன்னல் வழியாக நீலவானம் தெரித்தது. அதில் காலி ஃப்ளவர் மேகங்கள் சில மிதந்தன. - சின்னச் சின்ன சப்தங்களுடன் அவ்வப்போது மெலிய காற்றில் சவித்துக் கொண்டது மரம். அந்த விளக்குகள் நீல நட்சத்திரங்களாகத் தெரிந்தன, சூழ்நிலை வர்ணிப்புகளிலும் சுஜாதாவின் உரை நடை குதித்துக் களித்துத் தாவி விளையாடுவது போல் லாவக மாகச் செல்கிறது. - கிராமப்புறச் சூழல் பற்றிய வர்ணனை இது: "அம்மன் கோயில் வாசலில் இடது பக்கம் பத்தல் கட்டியிருந்தது. மைதானத்தில் தகர ராட்டினம் சுற்றியது. நாககன்னிகை பெண் தலையும் பாம்பு வாலுமாகச் சிரித் தாள். இரண்டு தலே ஆடு அருவருப்புத் தந்தது. சின்னக் குழந்தைகள் ஜவ்வு மிட்டாய் கடிகாரங்கள் அணிந்தார்கள், பயாஸ் கோப்பு பழனிச்சாமி எப்போதும் ஹவுஸ் ஃபுல்லாக இருந்தான். மூங்கில் மேல் ஒலிபெருக்கி நேத்து வச்ச மீன் குழம்பின் பிரதாபம் பேசியது. சாக்கு நிழலில் பெரிய வானவிகளில் மணல் கலந்து பட்டாணிக் கடலைகள் உற்சாகமாகக் குதித்தன. சைக்கிள் டயர் வைத்த வண்டி யில் நீள நீளமாக பஜ்ஜியும் மீன் வறுவலும் எண்ணெயில் பொரித்தன. பிளாஸ்டிக் மோதிரங்கள்; இருபத்தி சொச்ச ரூபாயில் புடவைகள்; கழகப் பாடல்கள்; கட்சி தேங்கள்; முருகன் பாடல்கள்; தொடுகுறி சாஸ்திரம்; மதன காமராஜன், அறுபத்து நான்கு வித ஆப்டோன் படங்களுடன் கொக்கோக சாஸ்திரம்; பம்பு செட்டுகள். மாலை, மேம்பட்டி ஜனங்கள் கோயிலைப் பார்த்து வாயிலில் உட்கார்ந்திருந்தார்கள். 'தொம்தம்த, தொம் தம், என்று உடுக்கு சப்தம் கேட்டது. பூசாரி மீசையில்