பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 2}} அணிந்திருத்தாள். கழுத்தில் காதில் நகைகள் இல்லை; திருவள்ளுவரின் மனைமாட்சி என்கிற அத்தியாயத்திலிருந்து நேரே நடந்து வந்தவள்போல் இருந்தாள்.' வேலி தன்ருக இழுத்துக் கட்டப்பட்டிருந்தது எனும் விவரம் சுஜாதாவின் நடையில் இந்த விதமாகச் சித்தரிக்கப் படுகிறது: கட்டிடங்களைச் சுற்றி அமைந்திருந்த வேலி மிகவும் சிரத்தையுடன் இழுத்து விண் என்று கட்டப்பட்டுச் சராசரி மனிதன் எவனும் கடக்க முடியாத உயரம் வரை எந்த இடத்திலும் இடைவெளியோ வெட்டோ இல்லாமல் நல்ல கற்புடன் ஆக்ரோஷமாக இருந்தது.” சாதாரண சமாச்சாரத்தையும் புதுமையான முறையில் எழுதுகிற சுஜாதாவின் போக்கிற்கு மற்றுமொரு உதாரணம் 'தப்பித்துப் போன பெண்ணை டில்வி ஜனங்களின் மத்தியில் கண்டு பிடிப்பது, பத்து மாடிக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து எச்சில் துப்பி அது கீழே ஸ்கூட்டரில் விரைவாகச் செல்லும் என் நண்பர் வரதாச்சாரியின் வழுக்கையான மண்டையில் படுவது எவ்வளவு சாத்தியமோ அவ்வளவுதான்.” பெண்ணின் சிரிப்பு சுஜாதாவின் நடையில் விகம் விதமான அழகு பெற்றிருப்பதை அவரது நாவல்களில் கானலாம். பெண் கிச் என்று தெருப்புக்குச்சி கிழிப்பது போல் சிரித்தது.” ‘கவர் கவராக, பச்சை சிவப்பாக, நீலமாக, ஊதாவாக, மத்தாப்புப் பொறியாகச் சிரித்தாள், வெண்கலச் சிரிப்பு இல்லை, இப்ளிங்கின் பெல்ஸ் கவிதை போலச் சிரிப்பு.’