உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் உரைநடை

213

‘கல்யாணராமன் மிகவும் மனத்தில் வாழ்பவன்’. ‘இளைஞர்களுக்குத் தான்—மிக இளைஞர்களுக்கு’, ‘மிகவும் மிக சுவார்ஸ்யமான விஷயம்’, ‘மிக ஒழுங்கான பற்கள்.’

‘மரபுகளை மீறி, இஷ்டம்போல் சொல், சேர்க்கைகள் பண்ணி எழுதுவதன் மூலமும் சுஜாதா நடையில் புதுமை கூட்டுகிறார்:

‘விஜயா மெடிக்கல்ஸ் காலண்டர் ஒன்றில் ஹேமா நாட்காட்டினாள்.’

‘அந்த டம்ளரை பிரமித்தேன்.’

‘மாலை போடுகிறார்கள்—ஃப்ளாஷ்ச்சிடுகிறார்கள்.’ ‘பட்சிகள் டிர்ரர்ரிக்க’

‘அங் கங் கங் கங்கே அலட்சியமாக’

‘அவர்கள் 4 வரும் என்னை அணுக’

‘எஸ் சார் என்றேன் பெரிய எழுத்தில்’

‘பிரதமரின் கீச்சுக்குரல் ஒலிபெருக்கிக் கொண்டிருந்தது. யார் யாரோ ஹுஸேனை ஹலோ செய்தார்கள்.’

(டெலிபோனில்) ‘மற்றொரு நம்பர் தந்தார்கள். அந்து மற்றொருவைச் சுற்றினேன்.’

இப்படி எத்தனையோ காணலாம்.

வார்த்தையையும் பொருளையும் வைத்து விளையாடுகிற சொல் சாதுரியத்தை ‘பன்’ (Pun) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். சிலேடை நயம் என்று தமிழில் சொல்லலாம். இந்தச் சொல் அம்மானையை சுஜாதா திறமையாகச் செய்து வருவதை அவருடைய படைப்புகளில் இடைக்கிடை காண முடியும்.