பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை Žiš இவ்வாறெல்லாம் எழுதியிருக்கிரு.ர். மேலும்*காசு எனக்கு எவ்வளவோ வசதிகள் தருகிறது. ரம்மி ஆடலாம். புத்தகங்கள் வாங்கலாம். சில பார்ட்டிகளேத் தேடிப் போகலாம். சில பார்ட்டிகள். А முத்திரையைக் கவனித்தீர்களா? உங்களுக்கு என்ன வயசு? மேலே படிக்கலாமா? சின்னப் பையன்கள் எல்லாம் ஒரு தடவை ஜோராகக் கைதட்டிவிட்டு விலகிக் கொள்ள அம்." (ஜேகே) "நான் அந்தப் பெண்ணைக் காதலிக்கலாமா என்று யோசித்தேன். அவள் ஆர்வத்துடன் அந்தப் பிரிவுப சாரத்தைக் கவனித்தாள். அவளை நான் கவனிக்கச் சந்தர்ப்பம் தந்தாள்; எனக்குக் கொஞ்சம் அவகாசமும் மூடும் இருக்கும்போது, என் தமிழ் கொஞ்சம் தீட்டப்பட்ட பின், அவளை அழகாக வர்ணிக்க கீழ்க்கண்ட இடத்தை ரிசர்வ் செய்திருக்கிறேன். அவளுடன் மேலே பேச விஷயம் தேடுவதற்குள் அவள் இயல்பாக நழுவி, காத்திருந்த மற்றவர்களுடன் கலந்தாள்.' (நில், கவனி, தாக்கு!) சுஜாதாவின் கதைகளிலும் நாவல்களிலும் புதுமையும் விறுவிறுப்பும், இனிமையும் எதிர்பார்க்க வைக்கும் வசீகரமும், கற்பனை வளமும் நிறைந்திருப்பது போலவே? அவருடைய எழுத்து நடையிலும் இளமை, புதுமை, அழகு, ஆழம், வேகம், விறுவிறுப்பு, சில சமயங்களில் கவிதைத் தன்மை எல்லாம் கலந்திருக்கின்றன .