பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21? ஏற்படுத்தும் விதத்தில் உரைநடையைக் கையாண்டிருப் பவர்கள் சோதனை ரீதியாக எழுத்து தடையைப் பயின்றவர்கள் ஆகியோரது வசன நடையை மட்டுமே நான் கவனிப்புக்கு உரியதாக்கி இப்பகுதியில் எடுத்துக் காட்டியுள்ளேன். r இவ்வகையிலான் உரைநடைப் படைப்புகளே இலங்கைத் தமிழ் எழுத்துக்களில் கண்டு பிடிப்பதற்குப் பலரது பலவிதமான படைப்புக்களும் எனக்குத் தேவைப்படும். இலங்கையில் இதுவரை வெளிவந்துள்ள எழுத்து முயற்சி களில் குறைந்தபட்ச அளவு நூல்களைக்கூட வாசித்தறியும் வாய்ப்பைப் பெற்றிராத நான், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் உரைநடையை மதிப்பீட்டு எழுதுவது எப்படி? ‘புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" புத்தகத்தில் நான் ஈழத்தின் புதுக் கவிதைகளை சரிவர ஆய்வு செய்து எழுதவில்லை என்ற குறை அங்குள்ளவர் களிடம் நிலைபெற்றிருக்கிறது என்று, என் நண்பரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக் ஜீவா சென்னையில் என்னே சந்தித்தபோது தெரிவித்தார். ஈழத்தின் பத்திரிகை களும், கவிதைத் தொகுதிகளும் எனது பார்வைக்குக் கிடைக்காமல் போனதுதான் அதற்குக் காரணம் என்று நான் அறிவித்தேன். இந்த உரைநடை ஆய்வு சம்பந்தமாகவும் அதே குறை எழக்கூடும். அது தவிர்க்க இயலாதது. நான் அறிய தேர்ந்த இரண்டு சழ எழு த்தாளர்களின் உரைநடையை மட்டுக் இங்கு அறிமுகப்படுத்துகிறேன். ஒன்று, எஸ். பொன்னுத்துரையின் உரைநடை. நாவலிலும் சிறுகதையிலும் இவர் சோதனைகள் செய்தது tiss--4