பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o பாரதிக்குப் பின் எழுதி நல்ல உரைநடை என மகிழ்ந்து போளுர்கள். உதாரணம்: 'இராமனது வாளி இராவணனுடைய மார்பில் பாய்ந்து, அவனுடைய முக்கோடி வாணுளே, முயன்றுடைய பெருத்தவத்தை முதல்வன் முன்னுள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வ ரத்தை, ஏனைத் திக்கோடு உலகனைத்தும் செருக்கடந்த புய வலியைக் கடந்து, உயிர் பருகிப்புறத்தே போந்தது.”

  • மயிலுடைச் சாயலாளை எயிலுடை இலங்கைநாதன் இதயச் சிறையில் வைத்தான்."

இவ்வாறெல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்த போதிலும், தமிழில் தகுந்த உரைநடை இல்லை என்கிற குறையை உணர்ந்து அவ்வப்போது சிலர் நல்ல உரைநடையை வளர்க் கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். உயிரும் உணர்ச்சியும் உள்ள வசன நடை யில்-மக்கள் மத்தியில் வழக்கத்தில் இருந்த பழகுதமிழில்கதைகள் எழுதிப் பரப்பியவர்களும் இருந்தார்கள், 'தமிழ் உரைநடை இலக்கியத்தின் தந்தை' என்று போற் றப்படும் வீரமாமுனிவர், 1740ம் வருஷ வாக்கில், பர கார்த்த குரு கதை’ என்கிற அவிவேக பூரணகுரு சிஷ்யர் கதையை எழுதினர் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல் கிரு.ர்கள். தாண்டவராய முதலியார் பஞ்சதந்திரக் கதை'களை எளிய தமிழில் எழுதினர். இதில்கூட ஐந்தாவது தந்திரத் தைச் சொல்லும் கதைப் பகுதி எளிதில் புரிந்துகொள்ள முடியாத கடின நடையில்தான் அமைந்திருந்தது.