பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 பாரதிக்குப் பின் அவை வெகுவாக ரமித்து... கற்பனையில் பூக்கும் மலர்களா?’’ எஸ். பொ.'வின் பார்வை, கற்பனைத் திறம். உவமை நயத்தோடு வர்ணிக்கும் திறமை ஆகியவற்றை இந்தப் பகுதி எடுத்துக் காட்டுகிறது. உணர்ச்சியை விவரிக்கும் போக்கிற்கு ஒரு உதாரணம் "தாவியின் உள்ளத்தில் சதிராடும் கோணல் விவகாரங் களையும் தோற்கடிக்கும் அசுரப் பசியொன்று அவருடைய உள்ளக் குழியிலிருந்து புற்றிலிருந்து சர்ப்ப மூச்சுடன் வெளிப்படுவதை உணர முடிகிறது. ஏதோ கஷ்ட காலத்தில், விரக்தியின் சிகவாக, ஒரு கனப்பொழுதின் அணுவளவு பின்னத்தில் தோன்றிய கொள்கை வெறியில் பிரமச்சரியம் பூண்டுவிட்டால், உடல் உணர்ச்சிகள் உலர்ந்த விறகுக் கட்டையாகி விடுகிறது என்று அர்த்தமா? குமைந்தெழும் கோணல் மன விவகாரங்கள் திரையைக் கிழித்துக் குஷ்ட முகத்தைக் காட்டுகிறது. நேர்மையற்ற, குறுக்கு வழியில், நிரம்பி வழியும் வெள்ளத்தை விரயமாக்கும், காம விவகாரம் என்னைத் தீண்டுகிறது.” - சிந்தனை விக்கிலும், எண்ணங்களை அடுக்கிச் சோல் வதிலும் புதுமை பண்ண விரும்பிய பொன்னுத்துரையின் வசனத்துக்குப் பின் வருவதை உதாரணமாகக் கூறலாம். “யாமளே மனளனல் பிடிசாம்பரான பஞ்ச பாணனின் வில், கரும்பினல் செய்யப்பட்டதாம்! நேரில் பார்த்த பிரஹஸ்பதி யார்? ரதியினல் சொல்ல முடியுமா? அவள் இப்பொழுது எந்த ஊரில், எந்தத் தெருவில், எந்த வீட்டில் பிஸினஸ் நடத்துகிருள்? அசல் ரதி செத்துப் போளுளா?