பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பாரதிக்குப் பின் தவழ்கின்றன. துருவ நட்சத்திரத்தின் வாக்கில், குகையான விழிக் குழியில் ஜொலிக்குக் கண்கள். அவற்றிற்கு வரம்பாக இராவணன் மீசையை ஒட்டினம் போல, மூக்கு நெற்றியில் வேர்விடும் இடத்திலே கூட நீக்கமின்றி அடர்த்தியாக இருக்கும் புருவங்கள். வெற்றிலைக் காலியில் தக்காளி நிறம் காட்டும் மேலுதடு. முகத்தின் பேர் பாதியை அடைத் திருக்கும் பெரிய கீழுதடுகள். கீழுதட்டின் பரிமாணத்திற்கு எடுபடாத சற்று அமுங்கிய மூக்கு நித்திய யெளவனக் கோலத்தில் சற்றே சோரம், முதுமை இன்னும் உடலில் புரையோடவில்லை. இருப்பினும் மனித உற்பத்திக் கலை வேளா வேளைக்கு வெற்றியீட்டியிருந்தால், தலைச்சன் ஈரேழு மாரிகளில் குளித்து மகிழ்ந்து, அவளை அம்மா உறவு கொண்டாடாதா?’’ "அவள் அவ்வளவு கிழவியல்ல; செங்காய். இளமை என்ற புளிப்பு இழைந்து கிடக்கிறது. காவியான சீனி டப்பாவில் ஒட்டிக் கிடக்கும் சீனிக் குறுணியைப் போல, என்ருே பெருங்காயம் வாழ்ந்த டப்பாவிலிருந்து வீசும் நெடியைப்போல, அவளிடம் இளமையுண்டு. இவற்றிற்கு மேல் ஒரு தனியழகை என் கலைக் கண்கள் அவதானிக்கின்றன. படமெடுத்தாடும் பாம்பின் வனப்பா? பாய்ந்து வரும் வரிப்புலியின் எழிலா? சிற்ருடை கட்டும் சிறுமியைப் போல தன்னை அபிநயித்துக் கொள்ளும் நடிப்புச் சேர்க்கும் தளுக்கா?” பொன்னுத்துரையும், தனி இலக்கியம்-நோக்குடைய படைப்பாளிகளும் மண்ணின் மணம் கலக்காத மக்களின் அன்ருட வாழ்க்கையின் ஜீவனும் பேச்சும் சேராத முறையிலேயே-தனி இலக்கிய நடையிலேயே கதைகள் நாவல்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டிஞர்கள். 1960 களில் ஈழத்து இலக்கியத்தில் தீவிரமான மாறுதல் புகுந்தது.