பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 223 இலக்கியம் சமூக நோக்குடன் மண்ணின் மணத்துடன், சாதாரண மக்களின் அன்ருட வாழ்க்கையை முற்றிலும் பிரதிபலிப்பதாய் அமையவேண்டும்; பொருளாதார, அரசியல் பின்னணிகளையும் போராட்ட உணர்வுகளையும் சித்திரிக்க வேண்டும் என்ற விழிப்பு உணர்ச்சியைப் பெற்று பலப் பலர் எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டார்கள். இவர்களுடைய எழுத்தில் யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கும் யாழ்ப்பாணம்-இலங்கைச் சூழ்நிலை வர்ணிப்புகளும், மக்களின் பழக்க வழக்க விவரிப்புகளும் தாராளமாக இடம் பெற்றன. இந்த வகை எழுத்தாளர்களுள் ஒரு உதாரணமாக செ. யோகநாதன் உரைநடையை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். பேச்சுத் தமிழ் உரைநடை: 'கதைத்துக் கொண்டிருந்த பாக்கியம் இடையில் சிறிது நிறுத்தி யோசித்துவிட்டு அவனைப் பார்த்தாள். ஒண்டு சொல்லுவன் கோவிப்பியளே? "என்ன? என்னென்டு சொல்லுமன்?: *நீர் கோவிக்க மாட்டீர்தானே? ஓம் கோவிக்கன் சொல்லும் 'உம்முடை அடுக்குப் பெட்டிக்குள்ளே தாளாக ஐஞ்சு ரூபா வைச்சிருந்தனிரல்லோ...' ஒ வைச்சிருந்தனன், சொல்லும்." அவளின் தயக்கம் சிறிது சிறிதாய்க் குறைய, தெளிந்த கடலின் மெதுவான அலை புரளல் போல அவள் ஆறுதலா கின்ருள். - .