பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பாரதிக்குப் பின் அந்தக் காசை எடுத்து பொன்னம்மாக் காட்டைக் குடுத்திட்டன். அவ பிள்ளைக்குச் சன்னியெண்டு ஒடித் திரிஞ்சா. கந்தையரும் அவ. காசுக்குப் போக நாயைச் சூக்காட்டி விட்டிட்டாராம். அவைப் பார்க்க மனவருத்தம் வந்திட்டுது. எடுத்துக் குடுத்திட்டன். நீங்கள் கோவிக் கிறியளே? என்ன செய்யிறது பாவம். ஏழையளுக்கு ஏழையள் உதவாமை...என்ன நான் சொல்லுதன் நீங்க பேசாமலிருக்கிறீங்க?" 'அவன் நாகலிங்கத்தைப் பார்த்தாள்." உவமைகளேக்கூட, பாத்திரங்கள் வாழ்க்கையோடு ஒட்டிப் பழகுகிறவற்றிலிருந்தே படைத்திருக்கிருர் யோக நாதன். கதைமாந்தர் மீனவ மக்கள். ஆகவே, அவர் கூறுகிருர்: 'பாரை மீன் போல அவனது உணர்வுகள் துள்ளிக் குதித்தன. ஒட்டி மீனப்போல வழுவழுப்பான அவளின் உடலோடு அவனுக்கு என்ன மூர்க்கம்!" ‘'எத்தனை ஆத்திரம்...எதிரே வருபவனைக் கொலை செய்து விடுவான் என்று நினைக்கத் தூண்டிய அவனின் கோபம் பொங்கிய தோற்றம் வெளியே நின்றவரைப் பார்த்ததும் கணவாய் முட்டைகள் கடல் நீருள் உடைந்தழிவது போல உருவற்று அவனுள்ளேயே அழிந்து அமூங்கிவிட்டன.” - "கடலின் உள்ளே வாய் விரித்துக் கிடந்தபடியே பிராணியையோ ஆட்களின் காலேயோ தன்னில் பட்டதாக உணர்ந்து கொண்டதும் கவ்விக் கொள்ளும் ஆர்க்கைப் போல அவனது நெஞ்சைக் கந்தையரின் ஒலி கடித்து இழுத்து வெளியே போட்டுக் குதறிக்கொண் டிருந்தது.” *