பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 225 யோகநாதன் தெளிந்த, எளிய, அழுத்தமான நடையில் விஷயங்களை விவரிப்பதில் தேர்ந்தவர். ஒரு உதாரணம்: "நாங்களிருவரும் எங்கள் வாழ்க்கையில் கழிந்துபோன நாட்களின் பயனற்ற பொழுதுகளையும் கோணற் சிந்தனை களையும் அசை போட்டு எதிர்காலம் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தோம். தர்மபாலா எல்லா விதங்களிலும் பதப்பட்ட உருக்காயிருந்தான். விவசாயியின் மகளுன அவள் வாழ்வின் ஏற்ற இறக்கங்களம், இருர வசீகரங்களையும் திேருது நேராகவே உணர்ந்து தரிசித்தவன். பசியின் கொடிய கிாதங் களின் நசிப்பினிடையே துணிவையும் வாழ்வில் கூர்மையான நம்பிக்கையையும் அவன் கொ ண்டிருந்தான். அவனுடைய பேச்சிலே உல்லாசத்தை எதிர்பார்க்கும் கற்பனையார்ந்த வேட்கை சற்றேனும் தொனிக்கவில் ஆல. கதாபாத்திரத்தை வர்ணிக்கும் இடங்களிலும் இடவர்ணனை, சூழ்நிலை விவரிப்புகளிலும் யோகநாதனின் மொழி வளமும் நடை நயமும் சிறந்து விளங்குகின்றன. ஒரு பாத்திரம் பற்றிய வர்ணிப்பு இது 'காட்டுப் பாதையில் எரிந்து சரிந்திருக்கும் இடைத்த தேக்க மரம் போல அவனது வைரம் பாய்ந்த உடம்பு; வாரப்படாமையில்ை எந்நேரமும் அலைந்து பறந்து கொண்டிருக்கும் நீண்ட ரெட்டைத் தலைமயிர்; விழித்திருக் கின்ற நேரமெல்லாம் கண்கள் நித்திரை கொள்வதுபோல அரைகுறையாகச் சோர்ந்து களேத்திருக்கும். நெஞ்சின் வலதுபுற மார்பில், கத்தி தாளவெட்டி ஆறிப்போன பெரியதோர் தளும்பு. அவனது இடது கையில் சீறிக் காலைத் துரக்கி நிற்கும் சிங்கத்தின் உருவம் பச்சை குத்தப் பட்டிருந்தது. கால்களே நிலத்தில் அழுந்தி அவன் நடக்கும் போதும், புருவம் அடர்ந்த கூசும் கண்களால் உற்றுப் பார்க்கின்ற வேளையிலும், அவனுக்குப் பக்கத்திலுள்ளவர் களுக்கு ஒதுங்கிப் போகும் அச்சம் தோன்றுவதோடு மட்டுமல்லாது பயங்கலந்த மரியாதையும், ஒதுக்க மைேபாவமும் நெஞ்சினுள்ளே குடிகொள்ளும்: