பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--ب4 தமிழ் உரைநடை 229 வறண்டு உலர்ந்த மண் தண்ணீரை வாரி விழுங்குவது போல, சிறுவன் ஆவலுடன் கஞ்சியை விழுங்குவான். "மடத்துச் சாமியார்களின் காதில் ஆடுகிற தங்கக் குண்டலங்களைப் போல் மஞ்சள் கருவம் பூக்கள் ஆடின. "திடீரென்று சிரிக்கும் பைத்தியக்காரியைப் போல், பெருமழைக் காலத்தில் மட்டும் பெருக்கெடுத்து ஒடும் ஒடை.” அடுத்து, பூமணி என்ற எழுத்தாளரின் உரைநடை பூமணியும் கரிசல் பூமியில் பிறந்து வர்ைந்தவர். கி. ராஜநாராயணன் மாதிரியே இவரும் அந்த மண்ணின் மீது மிகுந்த பற்றுதலும் பாசமும் கொண்டிருக்கிருர், கரிசல் மண்ணே நம்பி, உழைத்து, நிறைவாக வாழமுடி யாமல் அவதிப்படுகிற மக்களின் சிரம ஜீவனமே இவரது கதைகளின் உயிர் மூச்சு , 'முன்னத்தி ஏர் பிடித்துச் சாலடித்துக் கொடுத்த கி. ராஜநாராயணன் அடிச்சுவட்டிலே சென்றபோதிலும், பூமணியின் உரைநடை தனித்தன்மை கொண்டதாக இருக் கிறது. கரிசல் காட்டையும், அங்குள்ள விந்தை மனிதர் களேயும், அவர்களுடைய வாழ்க்கையையும் கி. ராஜ நாராயணன் எழுதிஞர் தான். ஆனல், அவற்றை எல்லாம் இனிய, எளிய, அழகான மரபு நடையிலேயே அவர் எழுதி யிருக்கிரு.ர். பேசுகிற மாதிரி எழுத வேண்டும் என்று சொல்லி மாதரி சொகம் ரெம்ப்ப நிசய்ய என்று சில பதங்களை அவர் அகிகங்கே சேர்த்து வைப்பார். ஆளுல், பூமணி பேசுகிற வழக்கு முறையை அப்படியே உரைநடையாக்கப் பயின்றுள்ளார்,