பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 பாரதிக்குப் பின் "வடக்கே பூவரச மரத்துப் புஞ்சையில் கமலே இறவை யின் கீச்சட்டமும் உள்வாங்கும் இரைச்சலும் சன்னல் வழியே தெளிவாகக் கேட்டது.' "தெற்கு வரிசையில் வாய்களுக்குள் எழுத்துக்கள் பொரிந்து குதித்தன. பைக் கட்டுகளில் லொட்டு லொடுக் குகளாய்க் கிடந்த விளையாட்டுச் சாமான்களுக்கிடையில் சொருகியிருந்த புஸ்தகங்களை ரொம்பக் காசலேயாய் எடுத் தனர் சிலர். ஒரு பக்கம் உள்ளங்கையில் வழித்தெடுத்த எச்சு சிலேட்டில் பழைய எழுத்துக்களை அழித்துக் கொண் டிருந்தது. சொற்பமான நேரத்தில் சரித்திரத் தலைவர்கள் அனேகம் பேர் நாக்குகளைத் தாண்டிச் சென்றனர். இதை யெல்லாம் அமுக்கிக் கொண்டு, பள்ளிக்கூடத்தின் நாலா பக்கமும் சிறுகுரல்களின் ஏற்ற அதிர்வு." - 'அவன் ஊருக்குக் கொஞ்சம் பெரிய இவர். காடு கண்ணிக்குக் குறைச்சலில்லை. மந்தையைச் சுற்றித் தோட்டம். அதனல் தோட்டத்தில் ஒரு இத்தினிக்காணும் அழிம்பு தட்டுப்பட்டாலும் அவர் பெண்டாட்டி விசுக் கென்று தெருவுக்கு வந்து கண்டனமாக்கி வையத் தோதாக இருந்தது." w ‘எங்கையில வேல செஞ்ச ஆணும் பொண்ணும் அப் பிடியே சொட்டவால் குட்டிக மாதிரில்ல. கொத்தும்குறுணிக்குக் கொறையுமா. இதுக கம்மா கழுதைக மாதிரி கொணக்கு நொணக்குனு அலை புதுக; சிறுக்குனு கொத்தச் சொமந்துகிட்டு.” - - - பூமணி எழுதுகிற உரைநடையின் தன்மையைக் காட்டு வதற்கு இந்த உதாரணங்கள் போதுமானவை. அவர் சொல் கிற உவமைகளும் மண்ணுேடு ஒட்டியவை தான். "சகதிக் காட்டில் வண்டித் தடங்களாய் நெற்றி ரேகை கள் துணிப்பாய்த் தெரிந்தன."