பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 23i "உதிர்ந்த ஒடநெற்ருய் வீட்டின் தாழ்வாரத்துக் கடி யில் தோலைப் போர்த்திக் கொண்டு முடக்கிக் கிடந்தது அத்த தாய்." "குட்டியைத் தேடும் செம்மறியாட்டுச் சத்தம் மாதிரி அவர் குரலில் ஒரு காரல் தன்மை’ இவை சில உதாரணங்கள், அடுத்து, வண்ணநிலவன் உரை தடையைக் குறிப்பிட வேண்டும். மென்மையான உணர்வுகளை அழகாக எடுத்துக் கூறும் லலிதமான நடை வண்ணநிலவனுக்கு சித்தித்திருக்கிறது. ஆழ்ந்த விஷயங்களை மெதுமெதுவாக மேலோட்டமாகச் சொல்வி பையப்பைய உணர்வைத் தோடும் விதத்தில் இவர் சொற்களே வைத்துக் கதை பின்னுகிருர், 'ஈசாக் காட்டிலிருந்து திரும்புகிற நேரம் ஆகிவிட்டது. ஈசாக்குக்கு இப்போது காட்டில் எந்த வேலையும் இல்லை. அவனுடைய உலகம் காடு என்பதை எஸ்தர் சித்தி மட்டும் எப்படியோ தெரிந்து வைத்திருந்து, வெயிலும் வறட்சியும் நிரம்பிய காட்டுக்குள் அனுப்பிவந்தாள். காட்டைப் பார்க் காமல் இருந்தால் ஈசாக் செத்தே போவான் போல. அவன் காட்டைப் பற்றிப் பேசாத நேரமே இல்லை. காடு மறைந்து கொண்டிருந்தது. விளைச்சலும், இறவைக் கிணறுகளில் மாடுகளின் கழுத்துச் சதங்கைச் சத்தமும் கண் முன்னு லேயே கொஞ்ச காலமாய் மறைந்துவிட்டன. ஊரில் எல்லோருக்கும் தேவையாக இருந்தகாட்டுக்குள் இப்போது ஒன்றுமே இல்லை. ஒரு வெள்ளை வெயில் விளைகளுக்குள் அடிக்கிறதென்று ஈசாக்கு சொல்லுகிருன். வெயிலின் நிறங் களை ஈசாக்கு நன்ருக அறிவான். மஞ்சள் வெயில் அடித் தால் நாளைக்கு மழை வரும் என்று ஆவன் சொன்னுல் மழை