பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடிை 235 ஐரோப்பிய, ரஷ்ய இலக்கியங்களில் செய்யப்படுவதைப் போல், பாத்திரங்களையும் சூழ்நிலைகளையும் இவர் இந் நாவலில் விசேஷித்த தனி நடையில் வர்ணித்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது. பாத்திர வர்ணனை: புஷ்ப்பாய்க்கு வயது இருபத் தொன்பது அல்லது முப்பதுக்குமேல் இருக்காது; வதுமை யும் துன்பமும் பட்டுப்பட்டு அவள் மெலிந்து சுருங்கி, பார்க்க முப்பத்தைந்து வயதுக்காரி போல் தோன்றிஞள். ஆலுைம் அவள் நிறம்-மேற்குக் குமரி மாவட்டத்துக்குரிய பிரத்தியேகமான மஞ்சளும் சிவப்பும் கலந்த அருமையான நிறம்-இன்னும் மங்கிவிடவில்லை. ஏற்கெனவே நீண்ட மூக்கும் நீண்ட கழுத்தும் நீண்ட கைகளும் உடைய அவள் இந்த மெலிவிஞல் இன்னும் சற்று அதிகம் நிண்டு போய்த் தோன்றினள், இதை மிகைப்படுத்துவது போல அவளுடைய முகம் ஒடுங்கி நீளவட்டமாய் அமைந் திருந்தது. பார்ப்பதற்குக் கொஞ்சம் சிடுவிடுப்பானவள் போல எல்லாவற்றின் மீதும் எரிந்து விழுபவள் போல இருக்கும். ஆளுல் வியர்வைப் பிசுக்கு படர்ந்த அந்த நீன வட்ட முகத்தில் மூக்குத்தண்டின் மேலே சிறிது இடம்விட்டுத் தொடங்கி இரண்டு பக்கங்களிலும் வில்போல் வளைந்து நின்ற மெலிந்த புருவங்களின் கீழே அவளுடைய நீண்ட கனவு காணும் விழிகளிலோ சோகம் ததும்பும் ஒரு சாந்த மான ஒளி நிறைந்திருந்தது. பிறவியிலேயே அந்த மாதிரி அமைந்துவிட்டது போல, அப்படி அமைத்திருப்பது தான் அந்தக் கண்களுக்குச் சிறப்பு என்பது போல அந்த ஒளி அவளுடைய முகம் முழுவதிலும்-அவளுடைய முழுமை யிலுமே-வியாபித்து நிற்பதுபோல் தோன்றிற்று. மெல்லிய இமைகளை விரித்து அவள் விழிகளைத் திருப்புகையில் ஆயிரம் ஆண்டு துன்பத்தீயிலே எரிந்து அதையே தன் வயமாக்கிக் கொண்ட ஒரு ஏழை ஆன்மாவின் வசீகரமான ஒளி அவளைச் சுற்றிப் படர்ந்தது.'