பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பாரதிக்குப் பின் சூழ்நிலை வர்ணிப்புக்கு ஒரு உதாரணம்: "அது ஒரு மல் யடிவார மூன்று ரோடு சந்திப்பு. வடக்கே கருநீல நிறத்தில் குறுக்கும் நெடுக்குமாக மடிந்தும், கோபுர மொட்டைகளாக ஆங்காங்கே நரைதட்டிக் குவிந்தும் கிடந்த மலைத் தொடர் களின் அடிவார எல்லேயாகவும், மலைச்சரிவின் ரப்பர் தோட்டங்களையும் பள்ளத்தாக்குகளின் நெல் வயல்களையும் பிளந்து போடும் கரும்புத் தடமாகவும் கிழக்கிலிருந்து மேற்காக நீண்டு போகும் தார்ச்சாலையில் வடக்கு மலையிலிருந்து செங்குத்தாக இறங்கி வரும் தார் ரோடு சங்க மிக்கும் முச்சந்தி. சுதந்திரத்துக்கு முன்னே இந்தப் பகுதி யானைமேயும் வனமாக இருந்தது. இப்போதோ, இருண்ட வனங்களில் சொட்டையாக ஆங்காங்கே புதிதாய்ப் பிளந்து விரியும் அரசாங்க ரப்பளித் தோட்டங்களிலும் தேக்குத் தோட்டங்களிலும், மற்றும் தனியார் தோட்டங்களிலும் வேலே செய்யும் ஆயிரக்கணக்கானதொழிலாளிகளின் குடிசை களால் விளிம்பு கட்டப்பெற்ற இந்த ரோட்டோரங்களை ஒட்டி ஆங்காங்கே சிறிய பேரிய குடியிருப்புகள் முளைத்தெழ நிலேமை மாறி வருகின்றது. என்ருலும் இனத்துக்குரிய பிரத்தியேகத் தன்மைகள் இன்னும் மாறிவிடவில்லை.” எளிமையான நடையில் ஒரு அதுகு இருக்கிறதென்ருல் இவ்வாறு பின்னல்கள் இணைப்புகள் கலத்த இடையில் ஒரு, மிடுக்கும் எடுப்பும் உள்ளது என்பதை ரசிகர்கள் உணர ಕ್ರಿಫಿಟ್ಟಿ:ಸಿ. ஐந்தாறு வருட காலத்திற்குள், தனது எழுத்தாற்றல்கற்பனைத் திறன்-சமுதாயப் பார்வை-உண்மை நிலைமை களே உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லும் துணிவுதீர்க்கமான சிந்தனை ஆகியவற்றின் பலத்தின்மீது கதைகளும் தாவுக்களும் எழுதி, இதுணிப்புப் வெற்றிருப்பவர்