பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிக்குப் பின் ஆகவே, தமிழ்உரைநடையின் வளத்தைக் கதைகளில் தான் மிகுதியாகக் காணமுடிகிறது. மொழிப் பயிற்சியும் இலக்கண அறிவும், எழுதி எழுதிப் பழகிய தேர்ச்சியும் கொண்டு நல்ல வாக்கியங்களே எழுதிவிடலாம்தான். அவ் வாது எழுதும் வாக்கியங்கள் அமைப்பிலும் அழகிலும் சிறப் புற்றிருந்தால் நயமான நடை என்று கருதப்படுதலும் கூடும். ஆயினும், அழகான நடை-தனித்துவம் உள்ள வசன நடை-என்பது, மரபு ரீதியாக, இலக்கண அமைதிக்கு ஏற்ப, மட்டுமே அமைக்கப்படுவது அன்று. உரைநடைக்கு சொற் கள்தான் அடிப்படை என்ருலும், வெறும் சொற்களால் மட்டும் ஜீவனுள்ள, கலே நயமான நடை அமைந்து விடுவ தில்லை. கருத்தோட்டம், சொல்சேர்க்கை, ஒலிநயம், வேகம், அழுத்தம் முதலிய அம்சங்களும் அதில் அடங்கி யிருக்கும். இலக்கியப் பயிற்சி, சிந்தனைத் திறம், கற்பனை வளம், அனுபவம், பார்வை வீச்சு, மனப்பண்பு இவற்றுக்கு ஏற்பவே நடைநயமும் அமைகிறது, உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம் என்ற பாரதி வாக்கையும் நாம் நினைவில் நிறுத்திக் கொள்வது பாரதிக்கு முன்பிருந்தே உரைநடையில் நல்ல முயற்சி களும் சாதனேகளும் நிகழ்ந்திருப்பினும், நான் பாரதியில் ஆரம்பித்து, பாரதிக்குப்பின் ஏற்பட்டுள்ள உரைநடை முயற்சிகனேயே கவனிக்க முற்பட்டிருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி கவி சுப்பிரமணிய பாரதி யிலிருந்தே தொடங்குவதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக் கிறது. 'தமிழ் மறுமலர்ச்சிக்குப் பொன் ஏர் பூட்டிய முதல் வன் பாரதிதான் என்று மறுமலர்ச்சி எழுத்தாளர்களும்