பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சி. சுப்பிரமணிய பாரதி கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று பாரதியார் தனது கருத்தைப் பல இடங்களில் அழுத்தமாகக் குறிப்பிட் டுள்ளார்: அவற்றிலே இதுவும் ஒன்று: "ஒளி பொருந்தும்படி தெளிவு கொண்டதாகி தண் ணென்ற குளிர்ந்த) நடையுடையதாகி மேலோர் கவிதை யைப் போலக் கிடந்தது கோதாவரி நதி என்று கம்பன் வர்ணனை செய்கிருன். எனவே, கவிதைகளில் ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்க வேண்டுமென்பது கம்பனு டைய மதமாகும். இதுவே நியாயமான கொள்கை... அருமையான உள்ளக் காட்சிகளை எளிமை கொண்ட நடை யிலே எழுதுவது நல்ல கவிதை.” வசன நடைக்கும் பாரதி இதையே இலக்கணமாகக் கொண்டிருந்தார். ‘வசன நடை' என்ற அவருடைய +g - 玺、 y-o: w * * குறிப்பு ஒன்றில் இது தெளிவாகவே கூறப்பட்டிருக்கிறது. அவர் சொல்கிருர்: 'தமிழ் வசனநடை இப்போதுதான் பிறந்து பல வருஷ மாகவில்லே. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும். ஆத லால், இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷை யைக் காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும். கூடியவரை பேசுவதுபோல, எழுதுவது