பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாரதிக்குப் பின் தமிழ் நாட்டுக்கும் தமிழருக்கும் பயன்படக் கூடிய எழுத்துக்களையே எழுத வேணடும் என்று பாரதியார் ஆசைப்பட்டார். நாடு மேனிலை எய்தவும், நாட்டு மக்கன் நலமுத்து வாழவும் வழிகாட்டுவதற்காகவே அவர் கவிதை களும் வசனமும் எழுதினர். வசனத்தில் கட்டுரைகள், சித் தனக் குறிப்புகள், கதைகள், பஞ்சதந்திரக் கதைகளின் பாணியில் நவதந்திரக் கதைகள்’ என்று பல வகைகளில் அவர் தனது எண்ணங்களை, அபிப்பிராயங்களே, திட்டங்களை, போதனைகளை எல்லாம் குறித்து வைத்திருக்கிருர். எளிய நடையில், பெரும்பாலும் சிறுசிறு வாக்கியங்களில் எழுது அதே பாரதியின் இயல்பு. பாரதியின் உரைநடை பற்றிப் பேச முற்படுகிறவர்கள் பொதுவாக ஒரு உதாரணமாக எடுத்துக் காட்டுவது அவ ருடைய சிட்டுக் குருவி வர்ணனையைத்தான். "சிறிய தானியம் போன்ற மூக்கு. சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல்வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு, கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு: சிறிய தோகை, துளித் துளிக் கால்கள். இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப் பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டிவே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண், மற்ருென்று பெண். இவை தம்முள்ளே பேசிக்கொள்கின்றன. கு டும் பத்து க் கு வேண்டின உணவு தேடிக் கொள்கின்றன. கூடு கட்டிக் கொண்டு, கொஞ்சிக் குவாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து, முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசியில்லாமல் காப்பாற்று. கின்றன." - இப்படி மேலே மேலே வர்ணித்துக் கொண்டு போகிருர் பாரதியார், இத்தகைய எளிய, இனிய, அழகான வசன