பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை கிரு.ர். யுத்தவர்ணிப்பில் கம்பன் கையாண்டுள்ள முறை களை விளக்கி, இதர மகாகவிகளைவிட அவன் எவ்விதம் தனித்து மிளிர்கிருன் என்று காட்டுகிருர், ஆகவே ரசளு பூர்வமான ஒப்பியல் விமர்சனத்தை வ. வெ. சு. ஐவர் திறமையாகச் செய்திருக்கிருர், அதன் மூலம் தமிழ் இலக்கியத்தில் தரமான, முறையான, விமர்சனம் தோன்று வற்கு அவர் வழி வகுத்தார். எனவே, தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முதல்வரும் முன்னேடிகமாக ஐயர் விளங்கு கிரு.ர். தாம் சொல்ல விரும்பிய கருத்தைத் தெளிவாகவும், வாசகருக்கு நன்கு விளங்க வைக்கும் எளிமையோடும்; அழகாகவும் எடுத்துச் சொல்கிற உரைநடையை வ. வெ. க. ஐயர் கையாண்டார். உதாரணமாக ரசனேச்சுவை பற்றி அவர் கூறும் விளக்கப் பகுதியில் காணப்படுகிற சில வரிகளை இங்கே தருகிறேன். 'பெருங் காப்பியத்தில் என்ன என்ன விஷகங்களைப் பற்றிப் பேசவேண்டும் என்னு இலக்கணங்களில் ஒர் பெரிய ஜாபிதா காணப்படும். ஆளுல் காவியம் எவ்வாறு அமைக் கப்பட வேண்டும், என்ன என்ன இலக்கணங்கள் பெருங் காப்பிவத்துக்கு இ ன் றி ய ைம ய ா த ைவ, பெருங்காப் பியங்களின் போக்குக்கும் ஏனைய காவியங்களின் போக்குக் கும் என்ன வித்தியாசம் என்ற விஷயங்கள் நம் இலக்கணங் களில் விசாரிக்கப்படவில்லை. மேனுடுகளின் அரிஸ்தோத் தலின் காலம் முதற்கொண்டு இலக்கண நூலாசிரியர்கள் காவிய அமைப்பைப் பற்றிப் பெரிய பெரிய ஆராய்ச்சிகள் வெளியிட்டிருக்கிருர்கள். நம்மவர் காட்டிலுள்ள மரங் களைத் தனித்தனியே கவனித்துக் கொண்டு வந்து அரணி யத்தை மறந்து விட்டார்கள், மேளுட்டவர் கரங்களைக் கவனித்ததோடு கூட அரணியத்தைப் பற்றியும் விசேஷ் மான ஆராய்ச்சிகள் செய்துள்ளார்கள்."