பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை ఫ్రిక్త அவருடைய குரலில் விசேஷமான இனிமை இராவிட்டாலும் அவருடைய வார்த்தையை காது தேவாமிர்தத்தைப் பருகுவது போலப் பருகுகிறது. அவரிடத்தில் பேசும் போது வாய் குளறுகிறது; நாக்குக் கொஞ்சுகிறது. இதெல்லாம் அன்பின் அடையாளம். ஆனல் இவ்வன்பு எப்படியிருக்கிறது என்ருலோ அது தேவ ரகசியம்மனிதரால் சொல்ல முடியாது." இது ஐயர் எழுதிய லேலி மஜ்னுன் கதையில் வருகிறது "மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் சிலவற்றை வ. வெ. சு. ஐயர் எழுதியிருக்கிருர், தமிழ்ச் சிறுகதைக்கு இலக்கிய பூர்வமான வடிவத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வோடு சோதனைகளாகச் செய்யப்பட்ட முயற்சிகள் இவை; முதல் முயற்சிகள், ரீதி புதிது’ என்று அவரே குறிப்பிட்டிருக்கிருர். "கதைகள் கவிதை நிரம்பியவையாய். ரஸ்பாவோ பேதமாய் இருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம். இக் கதைகளே அவ்வாறே செய்ய முயன்றிருக் கிறேன்’ என்றும் அவர் கூறுகிரு.ர். சிறுகதைக் கல்ை தமிழிலும் வெகுவாக வளர்ந்தோங்கி விட்ட இந்நாளில் ஐயரின் கதைகள் (தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முதல் முயற்சிகள்) பல குறைபாடுகள் உடை பனவாகத் தோன்றுவதில் வியப்பில்லை. ஆனலும் ஐயர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று நிரூபிக்கும் குளத் தங்கரை அரசமரம் இன்றும் அருமையான ஒரு படைப் பாகவே மிளிர்கிறது. இந்தக் கதையை உருவாக்கியதன் மூலம், வ.வெ.சு.ஐயர் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முதல்வர் என்ற அந்தஸ்தையும் பெற்ருர். * - கதையின் விஷயம் சாதாரணமானதுதான். ருக்மணி என்ற சிறு பெண்ணின் பெற்ருேர் செல்வராக இருந்த போது, நாகராஜன் என்ற பையனுக்கு அவனுடைய