பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ు; 36 பாரதிக்குப் பின் பெற்ருேர், அவளை மணம் முடித்து வைக்கிரு.ர்கள். பெண்ணின் தந்தை, பாங்குமுறிவு காரணமாக ஒரே நாளில் ஏழையாகி விடுகிருர், உடனே பையனின் பெற்ருேர் பெண் விட்டாரைப் புறக்கணிக்கிருர்கள்; நாகராஜனுக்கு வேருெரு இடத்தில் பெண் பார்த்துத் திருமணம் செய்யத் தீர்மானிக் கிருக்கள். நாகராஜன் கைவிடமாட்டான் என்று நம்பியிருந்த ருக்மணி ஏமாற்றம் அடைகிருள். தனது உண்மையான திட்டத்தை அவளிடம் தெரிவிக்க அவன் விரும்பவில்லை. அதனுல் ருக்மணி தற்கொலை செய்து கொன் கிருள். விரக்தியுற்ற நாகராஜன் சன்னியாசியாகிருன். ஆளுன், கதை சொல்லும் உத்தி புதியது; அவ்வழியில் ஐர்ே அதை எழுதிய முறையும் புதிது. ருக்மணி கதையைக் குளத்தங்கரை அரச மரம் கூறுவது போல் கதை அமைந் இன் வசது. முதிர்ந்த ஒரு முதியவள் பேசுவது போலவே , அதை எழுதியிருக்கிரு.ர். கதையின் நடையைக் குறித்து அவர் இவ்வாறு அறிவிக்கிருர்: 'க.ைசிக் கதையானது எங்கள் ஊர் குளத்தங்கரை அரச மரத்தால் சொல்லப்பட்டது. அது நன்னூல் முதலிய இலக்கணங்கள் படித்ததில்லை. கிட்டத்தட்ட அது பேசிய படியே எழுதியிருக்கிறேனுதலால் படிப்போர் அக்கதையில் செந்தமிழை எதிர்பார்க்க மாட்டார்கள் என நம்புகிறேன். இருப்பினும், முற்றிலும் அது பேசியபடியே எழுதிளுல் இன்று, போதும் என்பன போன்ற வார்த்தைகளே இன்னு, போதும் என்று எழுத வேண்டி வரும்; படிப்போர் பொருள் கண்டு பிடிப்பது கஷ்டமாய்ப் போய்விடும் என நினைத்து அவை போன்ற மொழிகளே இலக்கணப்படுத்தியே 莒 எழுதியிருக்கிறேன்.' so ho 'குளத்தங்கரை அரசமரம்" கதையின் ஆரம்பமே எடுப்பாக அமைந்து, மேலே மேலே படித்துச் செல்லத் தாண்டுவதாக இருக்கிறது.