பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வ. ரா. பாரதியின் பக்தர் வ.ரா. புதுச்சேரியில் சில வருஷங்கள் தங்கி, பாரதி, அரவிந்தர், வ.வெ.சு. ஐயர் ஆகியோருடன் நேருங்கிப் பழகியவர் அவர் வ. ராமஸ்வாமி என்பது அவர் முழுப்பெயர். ஆனல், வ.ரா, என்ற முதல் எழுத்துக்கள் மூலமே அவர் தன்கு அறிமுகமாகியிருந்தார். 'பாரதிக்குப் பின் மணிக்கொடி காலம் ஒரு இலக்கிய காலகட்டம், அதுக்கு காரணமாக இருந்தனர் வ.ரா, பாரதியின் மறைவால் ஏற்பட்ட இடைவெளியை இட்டு திரப்பி ஒரு தொடர்ச்சி கொடுத்த, தமிழ் நாட்டில் ஆழ்ந்த கருத்துக்களோடு எழுதிய முதல் தரமான எழுத்தாளர் வ. ரா. இப்படி சி. சு. செல்லப்பா அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிருர், எழுத்தாளர்களின் முதல்வர்' என்றும், "எழுத்தாளர் தவேர்” என்றும், அவர் காலத்தில் வ.ரா. வை மணிக் கொடி எழுத்தானர்கள் குறிப்பிடுவது வழக்கம், பாரதியாகின் தேச பக்தியும், சமுக சீர்திருத்த வேகமும் வ.சா விடம் அதிகமாகக் காணப்பட்டன. நம் நாட்டின் இதிேல்கண்டு குமைந்து குமுறிய உள்ளம் ஆவருடையது. நம் நாட்டினரின் வீழ்ச்சியையும் பலவீனங்களையும் கண்டு, காரதியைப் போலவே, ஆவரும் கொதிப்படைந்தார்.