பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

毁 3 முன்ளுேர் பெருமை பேசிக் கொண்டு, சோம்பேறிகளாக மக்கள் வசிப்பதை அவர் வெறுத்தார். மூடப் பழக்க வழக்கங்களை, அர்த்தமற்ற நம்பிக்கைகளை, வீனன செயல்களை வெறும் பேச்சுக்களை எல்லாம் அவர் கண்டித்து எழுதி வந்தார், எழுதியதை விட அதிகமாகப் பேசிக் கொண்டிருந்தார். 妙 பேச்சு என்ருல், மேடைப் பேச்சு அல்ல. நண்பர்களிடம், தெரிந்தவர்கள் மத்தியில், சிறு கூட்டத்தில், அவரைப் பார்க்க வருகிறவர்களிடம் எல்லாம், எப்போதும் தனது கருத்துக்களை எடுத்துச் சொள்ளுர் வ.ரா. அவர் சிறந்த சிந்தனையாளர் மற்றவர்களும், தமிழர்கள் அனைவருமே, ஆழ்ந்து சிந்தித்து, வாழ்வின் உயர்வுக்காக உழைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். - ஜோதி என்ற சிறிய உணர்ச்சி தொலைய வேண்டும். என்னுடையது என்ற சின்ன புத்தி போய் நம்முடையது என்ற பெரிய புத்தி வரவேண்டும். மனிதன் என்ற பெருமை, சதா மார்பில் துடித்துக் கொண்டிருக்க வேண்டும். நியாயம் என்ற துடிப்பிலே நாம் எல்லோரும் மிதக்க வேண்டும். சோர்வு என்பதை கனவிலும் காணலாகாது. எல்லோருடனும் ஒட்டி வாழும் அருங்குணங்களை பயின்று: பழகிக் கொள்ள வேண்டும்,' இவை: வ.ரா.வின் கொள்கைகன். . ‘எந்த விஷயம் எழுதின லும் சரி.வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது என்று பாரதியார் வசன நடைக்கு வகுத்த இலக்கணத்தை வ.ரா. அப்படியே பின்பற்றினர். ஆகவே, அவருடைய கட்டுரை களும் கதைகளும் அவரே நம்முன் இருந்து நேரே பேசுவது போல் அமைந்துள்ளன. ஒரு உதாரணம், பாருங்கள்