பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைந.ை 41 வர்ணித்து, தமது நாட்டார்களேத் தரித்திர நாராயணர் களாகச் செய்தது நாளு?” (இதுதான் வாழ்க்கையா?. கட்டுரை); வ.ரா வின் தடைகுறித்து சி. சு. செல்லப்பா அழகாக எழுதியிருக்கிருர் வ. ரா. வின் கட்டுரைகள் ஒரு புது உருவ வார்ப்பானவை. ஆர்ப்பாட்ட பீடிகை போட்டு எங்கோ ஆரம்பித்து, எப்படியோ போய் எதிலோ முடிகிற மாதிரி இருக்காது . எடுப்பிலேயே கியாலப் மாதிரி எகிறும். நேரடியாக, விவகாரமாக அடிப்படை விஷகத்தைத் தொட்டு அதன் மேலேயே விவகாரம் வளரும். பேசுகிற மாதிரி நடை. தம்மோடு பேசும். வி. ரா. சம்பாஷணையில் திறமைசாலி. அந்த சம்பாஷணை நடைதான் எழுத்திலும், குறுகின சொல் அளவுக்குள்ளே நீண்ட கருத்து யாத்திரை செய்து முடித்த அனுபவத்தை உணர வைக்கும் அவர் எழுத்துக்கள். படித்த மனதிலே எதிரொலி கிளப்பிக் கொண்டே இருக்கும். தான் சிந்தித்ததோடு கேட்பவனையும் சிந்திக்கத் துண்டும் ஒரு வேகம் அந்தக் கட்டுரைக் கோப்பிலே, நடையிலே காணலாம்.' கருத்துகளையும் சிந்தனைகளையும் வலியுறுத்துவதற்காகவே வ. சா. கதைகளும் நாவல்களும் எழுதிஞர். எனவே அவை வ. ரா. வின் சொற்பொழிவுகளாகவே விளங்குகின்றன. பாரதியிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர், பாரதியை மகாகவி என்று நிரூபிப்பதற்கு அரும்பாடு பட்டார். அதுவரை பாரதியாரை வெறும் தேசீயக் கவி என்றும், வேதாந்தக் கவி என்றுமே பலரும் குறிப்பீட்டு வந்தனர். பாரதியை தேசீயம் என்கிற குறுகிய எல்லைக் குள்ளும், வேதாந்தச் சிமிழுக்குள்ளும் அடைத்து வைப்பது தவறு. பாரதி உண்மையில் உலக மகாகவி என்று கட்சி கட்டி வாதாடினர் வ. ரா. பாரதிக்கு மகாகவி அந்தஸ்து கிட்டும்படி செய்தார். ಓಷಿಣೆ-}