பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 辖 பாரதியாரிடம் புன்சிரிப்பைப் பார்க்க முடியாது. சங்கீதச் கிரிப்பைத்தான் காணமுடியும்.' வ. ரா. என்றவுடன் நடைச் சித்திரம்' என்ற சொல்லும் தமிழ் இலக்கிய ரசிகர்களின் நினைவில் இயல்பாகவே எழும். அவ்வளவுக்கு நடைச் சித்திரம் என்ற இலக்கிய வடிவத்தைப் பிரபலப்படுத்தியவர் அவர், அதை தமிழில் புதிய உருவமாகப் படைத்து, தனக்கென்று ஒரு தனிப்பாணியில் வளர்த்த பெருமை அவருக்கு உண்டு. அதன் தோற்றம் பற்றி வ. ரா. இவ்வாறு எழுதியிருக்கிருர்: 'தமிழ் இலக்கியத்தில், நடைச்சித்திரம் என்பது புதிய சரக்கு, மோரிசுக் கடலை நாட்டுக் கடலையை வெருட்டி விட்டு, வேரூன்றிப் போன கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது போலவே, நடைச் சித்திரம் என்பது வேற்று நாட்டு இலக்கியத்தின் சிறந்த ஆபரணமாயிருந்தும், நமது தமிழ் நாட்டிலும் எப்படியோ நிலைத்து விட்டது. நான் நடைச் சித்திரத்தைத் துவக்கின வரலாறு விசித்திரமானது. நடைச் சித்திரம் தமிழில் எழுத வேண்டும் என்று எனக்கு ஆவல் உண்டானது ஏ. ஜி. கார்டினர் அவர்களாலே, இங்கிலீஷில் நடைச் சித்திரம் எழுதுவதில் அவர் நிபுணர். இந்தச் சரக்கை தமிழிலும் ஏன் கொண்டுவரக் கூடாது என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன், கண்டிப்பாய் செய்ய வேண்டிய காரியம் என்று என் மனதிலிருந்து எனக்கு பதில் கிடைத்தது." - ஆகவே, அவர் மணிக்கொடி வாரப் பத்திரிகைக்காக வாரக் ஒரு நடைச் சித்திரம் எழுதினர். குழந்தை ராமு, மைக்குறத்தி, தாசில் அன்னதான மய்யர், கந்திராட்டு குண்டுப்பிள்ளை, வாத்தியார் நாணுவய்யர், அங்காடிக் கடை லட்சுமி, மார்க்கட்டு மாணிக்கம், குப்பிப் பாட்டி, சமையல் சாமா, மைனர் துரைக்கண்ணு, தாலுகா குமாலிதா, ஹோட்டல் மணி: