பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亭镇 பாரதிக்குப் பின் தாளி கோகிலாம்பாள், வேலைக்காரி அம்மாக்கண்ணு என்று, சமூகத்தில் காணப்படும் ரகம் ரகமான பாத்திரங்களைப் பற்றி, லேட்டர் வெயினில் எழுதப்பட்ட சொல் சித்திரங்கள் அவை. இப்படி முப்பத்தேழு பாத்திரங்களை வ.ரா. வர்ணித்திருக்கிருர், ஒருவகையான கேரக்டர் ஸ்கெடச்சஸ் அவை, பிற்காலத்தில் அநேகர் இத்தகைய சொல் சித்திரங்களைக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிரு.ர்கள். சிலர் சிறப்பாகவும் செய்திருக்கிருர்கள் என்ருலும், தமிழில் முதல் முதலாக தடைச்சித்திரத்தை சிருஷ்டித்து, பலதரப்பட்ட மனிதர் கஃப் பற்றியும் சுவாரஸ்யமான சொல் சித்திரங்கள் திட்டிய பெருமை வ.ரா.வுக்கே உரியது. - உதாரணத்துக்கு, மார்க்கட்டு மாணிக்கம்’ என்ற தடைச் சித்திரத்தின் ஆரம்பப் பகுதியை மட்டும் தருகிறேன்.

  • மார்க்கட்டு மாணிக்கம் கடைத் தெருவில் காகக் கடையில் விற்கும் நவரத்ன கற்களில் ஒன்றல்ல. மாணிக்கம் உயிருள்ளவன். அவன் மார்க்கட்டில் அலுக்காமல், சவிக்காமல் வியாபாரம் செய்கிருன். கடனுக்கு விற்றேன் என்று தலைமயிசைப் பிடித்து இழுத்து தொடையில் கை வைத்து, எலிகள் ஓடுவதையும் கவனிக்காமல், ஏக்கக் கவலேயில் ஆழ்ந்து கிடக்கும் மனிதனை, சித்திரத்தில் பார்த்திருப்பீர்கள். அந்தப் பேர்வழி யல்ல மாணிக்கம்.

மாணிக்கம் எதிலும் சுட்டி. எந்தச் சமயத்திலும் சுட்டி, அவன் சுறுசுறுப்பின் திரு அவதாரம், கடைக்கன் பார்வை யிலேயே அவன் உங்கள் ஜோவியை, சீக்கிரமாக உணர்ந்து கொள்வான், அவன் குரலின் கவர்ச்சியை, பிளேட்டில் எடுத்துத் தான் ஆனந்தப்பட வேண்டும். அல்லது நேரிலே கேட்டு அனுபவிக்கலாம். மனிதனுடைய குரலும் முகமும் சலுடைய வரப்பிரசாதங்களோ என்னவோ?"