பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 5 இவ்வாறு வர்ணித்துச் செல்லும் வ.ரா. மனிதரின் இயல்புகளையும் வாழ்க்கையின் தன்மைகளையும் நடைச் சித்திரத்தில் படம் பிடித்துக் காட்டுகிரு.ர். சம்பாஷணைக் கலையில் தேர்ந்த வ.ரா. சொர்க்கத்தில் சம்பாஷணை’ என்று புதுவிதமான உரையாடல்களைப் படைத்திருக் கி ரு ர். பச்சையப்பர் - பட்டினத்தார்? கண்ணகி-ஆண்டாள், தெளுவிராமன்-காளமேகம், கம்பர். பாரதி, மாதவி-தமயந்தி, இளங்கோ-சாத்தனர், காளி தாஸன்-மைகேல் மதுசூதனதத்தர், சத்திரபதி சிவாஜி, பாஜி பிரபு, நக்கீரர்-ஒட்டக் கூத்தர் ஆகியோருக்கிடையே சொர்க்கத்தில் நிகழ்ந்த கற்பனை சம்பாஷணைகள் மூலம் சீரிய சிந்தனைகளையும் ஆழ்ந்த கருத்துக்களையும் வழங்கியிருக் கிரு.ர். ‘வாழ்க்கையை அடியோடு செப்பனிட்டாலொ ழிய நமக்கு விமோசனம் கிடையாது. வாழ்க்கையைப் பற்றி நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் யோசித்துப் பாருங்கள். எல்லோரும் கலந்து, வாழ்க்கை என்பது இன்னதுதான் என்று நிர்ணயம் செய்வோம். குறியில்லாத வாழ்க்கை பாழ்; நெறி இல்லாத வாழ்க்கை பயனற்றது. இன்பமில்லாத வாழ்க்கை சாரமற்றது. அறிவுத்தெளிவு இல்லாத வாழ்க்கை மரக்கட்டை போன்றது. வாழ்க்கைமாண்பு கொண்டது என்பதை மறக்க வேண்டாம் என்று உறுதியாக அறிவித்தார் வ. ரா. வாழ்க்கையை மேலும் மாண்பு உடையதாக ஆக்குவதற்குத் தனது சிந்தனைகளை எடுத்துச் சொல்லவும், படிப்பவர்களை சிந்திக்கத் துரண்டவும் வ. ரா. உரை நடையை நன்கு பயன்படுத்திஞர்.