பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. டி.கே சிதம்பரநாத முதலியார் பேச்சுத் தமிழை எடுத்தாள்வதன் மூலமே மொழிக்கு உயிரும் உணர்ச்சியும் ஊட்ட முடியும்; ஜீவனுள்ள தமிழ் தடையை உருவாக்கவும் முடியும். அதனுல்தான் வ. ரா. சொன்ஞர். மார்க்கட் மாணிக்கத்துக்கும் அங்காடிக் கூடை லட்சுமிக்கும் புரியக்கூடிய தமிழ்தான் நல்ல தமிழ். சந்தையிலும் கடைத் தெருவிலும் கலகலவென்று பழங்கு கிற தமிழ்தான் உயிருள்ள தமிழ். அதையே எழுத வேண்டும். சாதாரன ஜனங்களுக்குப் புரியாத நடையில் எழுதுவதனுல் எவ்விதமான பிரயோசனமும் இல்லை என்று. பார்க்கப்போளுல், இந்த விதமான உரை நடையை 100 களிலேயே ஆனந்தரங்கம் பிள்ளை கையாண்டிருக்கிருர், அந்த வசனத்தை கவி பாரதியார் வெகுவாகப் பாராட்டி புள்ளார். x ‘துய்ப்ளேக்ஸ் என்பவனிடம் துபாஷ் உத்தியோகம் பார்த்த ஆனந்தரங்கம்பிள்ளை, பிரெஞ்சு-இந்திய சரித்திரத் தின் மகோன்னத பருவத்திலே அதன் மகோன்னத புருஷ லுக்கு விளக்குப் போலவும் ஊன்றுகோல் போலவும், சதா நாள் தவருமல், ஒவ்வொரு கார்யத்துக்கும் பக்க உதவியாக நின்றது மட்டுமேயன்றி அந்தக் காலத்தில் நடந்த செய்தி களையெல்லாம்.முக்கியமானது முக்கியமில்லாதது என்று கூடக் கவனிக்காமல்-ஒன்று தவருமல் சித்ரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்ருடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிருர்’ என்று கூறும்