பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 பாரதியார், தமிழ் பாஷையில் உன்மையான, யோக்கிய மான சரித்திர நூல் இஃதொன்று தான் இருக்கிறது’ என்றும், இந்தமாதிரியாக இந்த வழியில் எழுதப்பட்ட சரித்திரநூல் உலக முழுதிலும் வேறெந்த பாஷையிலும் இல்லை என்றும் குறிப்பிடுகிரு.ர். ஆனந்தரங்கம் பிள்ளையின் உரைநடை எத்தகையது என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். இதோ ஒரு உதாரணம் '13.4.1746 காலமே தரங்கம்பாடி சின்னதுரை பேர் விளங்கான் வந்தான். ஆள் கழுக்கு மழுக்கென்று மணலில்ே பிடுங்கி எடுத்த வள்ளிக் கிழங்காட்டமாயிருக்கிருன். முகம் பரந்த முகமாய் ஆனவாகனளுயிருக்கிருன். அவன் சென்ன பட்டணத்துக்குப் போயிருந்து வந்தவன். மீனாட்சி அம்மை சத்திரத்திலே வந்து சொல்லி அனுப்பினன். அதின் பேரிலே துரை மருமகன் முசே! கற்சாமும் கப்பித்தான் (கேப்டன்) குவாடும் வந்து பேர்விளங்கான எதிரேபோய் அழைத்து வந்தார்கள். வருகையிலே கெவுணி வாசலிலே பதிமூன்று பீரங்கி போட்டார்கள். அதின் பேரிலே, துரை வீட்டு மெத்தை மேலே, துரை வீட்டிலே, வடவண்டை வராந்திலே சற்று நேரங்கிறங்கி அங்கிருந்து அவர்களை எதிர்கொண்டு போய் கட்டிக் கொண்டு அழைத்துப் போளுர். அதின் பேரிலே உட்கார்ந்தாற் போலே கபே (காப்பி) கொண்டுவந்து வைத்தார்கள். கபே சாப்பிடுகையிலே துரை லோகபிரமாய் சேதி பேசிக்கொண்டிருந்தார்." அடுப்பங்கரையில் பெண்கள் பேசுகிற தமிழிலும், கிராமத்துப் பொதுச் சாவடிகளிலும், திண்ணைகளிலும், அரட்டைக் கச்சேரிகளிலும் ஜனங்கள் பேசுகிற பேச்சிலும் தனி வேகமும் நயமும் உண்டு என்று உணர்ந்த மற்முெரு