பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*辖 பாரதிக்குப் பின் இதெல்லாம் தவறு; 'பேசுகிற பாஷையில்தான் எழுத வேண்டும்; பாஷையின் நயம் பாவம் எல்லாம் அப்போது தான் கைவரும் என்று அழுத்தாய்ச் சொல்லிவிட்டார்! இப்படியாக ஜான்ஸனும் ரஸ்கினும் வாக்குமூலங்கள் கொடுத்தும் ஆங்கிலேயருக்கு அவ்வளவாகப் பிரயோசனம் இல்லாமல்தான் போயிற்று பத்து வருஷமாகத்தான் பேச்சு முறையில் எழுதவேண்டும் என்று எழுத்தாளர் எல்லாரும் சொல்ல ஆரம்பித்திருக்கிருர்கள். என்ருலும் யூனிவெர்சிடிகளில் பழைய சொக்கனே சொக்கன்தான் என்று பெர்னர்டுஷா சொல்கிருர், ஆகவே, பாஷையின் நயத்தை பாவத்தை எல்லாம் சரியான முறையில் பார்த்து அனுபவிப்பவர்கள் ரொம்ப சொற்பம் மேல் நாட்டில்: இங்கே அதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். தமிழ்ப் பாஷையைப் பற்றி யாராவது பேசும் போது எனக்குப் படுவது, அடல்டா, இவர்களுக்குத் தமிழை அனுபவித்த பழக்கமே இல்லாமல் போய்விட்டதே என்று தான். தமிழ் பாஷையானது, அதைச் செய்துவிடும்: இதைச் செய்துவிடும்!” என்றெல்லாம் விண்ணுக்கேற்றிப் புகழ்வார்கள். ஆனல் தமிழை அனுபவித்ததாகச் சொல்ல மாட்டார்கள், படே படே கைகள் சம்பந்தமாகவும் இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுக் கெல்லாம் பாஷையின் உணர்ச்சியில்லைதான்." இந்தவித எளிமையான, உயிருள்ள நடை வெறும் படிப்பிலுைம் பயிற்சியிலுைம் பழக்கத்திலுைம் மட்டுமே வந்துவிடாது. டி. கே. சி. யே சொல்லியிருக்கிருர்: "நடை யில் ஸ்டைல் இருக்க வேண்டும் என்ருல் (கால் இருந்தால் போதாது) உடலுக்குள் உயிர் இருக்க வேண்டும். அது போல எழுத்தில் ஸ்டைல் இருக்க வேண்டும் என்முல்