பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. உ. வே. சாமிநாதையர் பண்டிதர், புலவர், பள்ளிக்கூடம், கல்லூரி, யுனிவர் சிட்டி, பட்டப்படிப்பு-இவை எல்லாம் டி. கே. சி.க்குப் பிடிக்காத விஷயங்கள். பண்டிதர்களையும் புலவர்களையும் பட்டப்படிப்பு பெற்றவர்களையும் அவர் வெறுத்தும் குறை கூறியும் பரிகாசம் பண்ணியும் நிறையவே எழுதியிருக்கிருச்ச ஆலுைம் அவர் மனம் நிறைந்து பாராட்டிய பண்டிதர் புலவர் ஒரு சிலர் உண்டு. அவர்களில் ஒருவர் மகாமகோ பாத்யாய டாக்டர் உ. வே. சாமிநாதையர். சாமிநாதையரின் தமிழ் ஆர்வமும், புலமையும், கடுமை யான உழைப்பும் பழந்தமிழ் காவியங்கள் பலவற்றைத் தேடித் தந்தன. அவருடைய உழைப்பு இல்லையேல் அருமையான பல பழைய நூல்கள் தமிழுக்குக் கிடைக் காமலே போயிருக்கும். பழந்தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடி எடுப்பதற்காக அவர் நெடுகிலும் அலைந்து திரிந்து அல்லற்பட்டது. பெரும் அனுபவம் ஆகும். தனது அனுபவங்களே எல்லாம், தான் கண்டு பழகிய மனிதர்களைப் பற்றி எல்லாம் அவர் சிறுசிறு கட்டுரை கனாக நிறையவே எழுதியிருக்கிரு.ர். என் சரித்திரம்’ என்று கவசரிதை வாயிலாகவும் அவர் எத்தனையோ அரிய விஷயங்களை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிரு.ர். பெரும் புலவரான சாமிநாதையர் தனது புலமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு பண்டித நடையில் எழுதவில்லை. மிக எளிமையான, இனிய உரை