பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 நடை அவருடையது. கோபால கிருஷ்ண பாரதியார்பற்றி அவர் எழுதியுள்ள ஒரு குறிப்பு அவருடைய தமிழ் நடைக்கு நல்ல உதாரணங்கிாகும் 'நானும் என் தகப்பஞரும் மயூரத்தில் மகாதானபுர அக்கிரகாரத்தில் ஒரன்பருடைய வீட்டுத் திண்ணையிலிருந்து பேசிக் கொண்டிருந்தோம், பிற்பகல் 3 மணி இருக்கும். வீதி வழியே ஒருவர் நடந்து வந்தார். அவரைக் கண்ட என் தகப்பனுர் எழுந்து பாரதியாரவர்களா? என்று கேட்கவே வீதியிற் சென்ற அவர், யார் அது? வேங்கட சுப்பையரவர்களா? ஏது இவ்வளவு தூரம்?’ என்று சொல்லிக் கொண்டே நாங்கள் இருவரும் இருந்த திண்ணைக்கு வந்து அமர்ந்தார். உடனே என்னுடைய தந்தையாரின் கட்டளைப்படி அவரை தான் சாஷ்டாங்க மாக தமஸ்கரித்தேன். வந்தவர் கோபாலகிருஷ்ண பாரதியாரென்பதை யறிந்த நான் மிக்க வியப்பை அடைந்தேன். அவருடைய புகழையும் நந்தனர் சரித்திரத்தின் அழகையும் உணர்ந்து ஈடுபட்டிருந்த என் இளைய உள்ளத்துக்குப் பாரதியார் ஓர் அழகிய உருவத்தை உடையவராக இருப்பாரென்ற காரணமில்லாத தோற்ற மொன்று இருந்து வத்தது. நான் கண்ட காட்சியோ அதற்கு நேர் விரோதமாக இருந்தது . அகலமான புறங்கால்களுக்கு மேல் சூம்பின கால்கள்; பருத்த முழங்கால்கள்; தடித்த இடை, முழங்கால்களுக்கு மேல் வஸ்திரம்; கூனல் முதுகு; இறுகின கழுத்து; பெருத்த மூன்டொன்று முன் வந்திருக்கும் குரல்வளை, அந்தக் கழுத்தில் ஏக (ஒற்றை) ருத்திராட்சம்; மார்பில் வில்:ை ஒட்டு வில்லையோடுள்ள ருத்ராட்ச கன்டி பூனைக்கண்: