பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வசனநடை வல்லுநர்கள் கவி பாரதிக்கு முற்பட்ட காலத்தில், யாழ்ப்பாணம் க. ஆறுமுக நாவலர் வசன நடை கண்ட வல்லாளர்" என்று சிறப்புப் பெற்றிருந்தார். பிழையறத் தமிழ் எழுதப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு, அவர் பால பாட நூல்கள் எழுதி வழிகாட்டினர் என்று நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். சைவம் தழைப்பதற்காகப் பாடுபட்ட நாவலர், நல்ல தமிழ் நடை வளர்வதற்கு வழிகாட்டியபோது, பண்டித நடையைக் கையாளவில்லை. எளிய முறையில்தான் எழுதினர் என்பதை அவருடைய எழுத்திலிருந்தே புரிந்து கொள்ளலாம். 'நாமெல்லாம் மனைவி, மைந்தர் முதலிய சுற்றத்தார் களுடனே கூடியிருந்தாலும், வேளாண்மை வியாபாரம் உத்தியோக முதலிய லெளகீகங்களைச் செய்தாலும், சிவ நிந்தை வேதாகம நிந்தை கொலை களவு முதலிய பாவங்களை வெறுத்து, இரக்கம் முதலிய புண்ணியங்களை உடையவர் களாய், நமக்கினிய கடவுளுடைய திருவடிகளை நின்ருலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மறவாமற்சிந்தித்து வழிபட்டு வர வேண்டும். ஐயையோ, இப்படிச் செய்யாது போவோமாயின், தாம் எவ்வுயிர்களுக்கும் ஏகநாயகராயிருக் கிற கடவுளுடைய ஆணையினலே மறுமையிலே எவ்வளவு பெருந்தண்டனை ஆடைவோம்! -