பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 5ỷ மென்றுணர்ந்து கொள்ளல் வேண்டும். இங்ங்ணம் இரு வேறு வகையவாய் அமைக்கப்படும் படங்களுள் நிழலுருப் படத்தை யொப்பதே வரலாற்று நூலாமென்பதுTஉங் கைவல் ஒவியன் வரைந்த அரிய ஒவியத்தை யொப்பனவே கதைகள் நாடகங்கள் காவியங்களாகு மென்பது உம் நினைவிற் பதிக்கற்பாலனவாகும்.” மேற்கோள் ரொம்பவும் நீண்டுவிட்டது. ஆளுலும் மறைமலை அடிகள் எழுதியுள்ள ஒரு பாசாவில் முக்கால் பகுதிதான் இது. படைப்பிலக்கியம் குறித்து அடிகள் கொண்டிருந்த கருத்தை நன்கு விளக்குவதால் இந்தப் பகுதியைத் தேர்ந்தெடுத்தேன். காளிதாசனின் சாகுந்த நாடகத்தை அவர் தமிழ்ப் படுத்தியிருப்பதோடு, சாகுந்தல நாடக ஆராய்ச்சி’ என்ருெரு நூலும் எழுதியிருக்கிருர் மரணத்தின் பின் மனிதர் நிலை, நூருண்டு வாழ்வதெப்படி, தமிழர் மதம், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, கோகிலாம்பாள் கடிதங்கன் முதலிய தனிச் செந்தமிழ் நூல்கள் பலவற்றை ஆடிகன் எழுதியுள்ளார். 'கல்லாதார்க்கும் எளிதிற் பொருள் விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கோகிலாம்பான் கடிதங்கள்’ எனும் புனை கதை எழுதப்பட்டிருக்கிறது. எனவே, மறைமல் அடிகள் எளிய நடையில் எழுதினல் எவ்வளவு இனிமையாக நூல் அமையும் என்பதற்கு ஒர் எடுத்துக் காட்டாக அது விணங்குகிறது. "சொல்வின் செல்வர் என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர் பேராசிரியர் ர்ா, பி. சேதுப் பிள்ளை, அவருடைய தமிழ் நடை அந்நாட்களின் மிகப் பலரைக் கவர்ந்திருந்தது.