பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6t; பாரதிக்குப் பின் கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ஆவர். அதளுல் கம்பனின் கவிதை வரிகள் அவருடைய உரை இடையில் சரளமாகக் கலந்து ஓடும். 'பூஞ்சோலைகளில் பளிங்கு போன்ற பந்துகளை வீசிப் பிடித்துப் பாவையர் விளையாடுகின்ருர். அரங்குகளில் நடன மாதர் கைவழி நயனம் செல்லக் கண்வழி மனமும் செல்லக் கணிதடம் புரிகின்ருர், இத்தகைய இன்பம் நிறைந்த அணிவீதியில் கோமுனிவர் உள்ளே செல்கின்ருர், மஞ்செனத் திரண்ட மேனியும் கஞ்சமொத் தலர்ந்த கண்களும் வாய்ந்த இராமன் அவர் பின்னே செல்கின்ருன், பொன் மேனி வாய்ந்த இலக்குவன் அவன் பின்னே போகின்ருன்,' இந்த விதமாக எழுதுவது அவருடைய இயல்பாக இருந்தது. பொதுவாகப் பண்டிதத் தன்மையோடு இலங்குவது சேதுப் பிள்ளையின் உரைநடை உருவிலும் திருவிலும் ஒத்த தலைமகனும் தலைமகளும் ஊழ்வினைப் பயனல் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டுக் காதலுறுதலும், அம் மையலே மனத்திடைக்கி நையலுறுதலும், பின்பு அதனை யறிந்து பெற்ருேர் காதலர் இருவருக்கும் திருமணம் முடித்தலும் தமிழ் நாட்டுப் பழைய மணமுறையாகும். இன்னும், ஒர் ஆடவனேக் காட்சியாற் காதலுற்ற பின்னர் மத்ருெருவன மனத்தினும் தீண்டாத மாட்சி நிறையமைந்த மங்கையர்க்குரியதாகும். அறநெறி திறம்பாத அருங்காதலை மங்கையர் உயிரினும் உயர்வாகப் போற்றுவர்” எனும் வரிகள் மூலம் இதனை உணரலாம். பண்டித தடையிலேயே எழுதிய போதிலும், திரு. வி கலியாணசுந்தர முதலியாரின் உரைநடை மற்றவர்களின் நடையிலிருந்து மாறுபட்டுக் காணப்படுகிறது. பேசுவது போல் எழுத வேண்டும் என்ற கருத்துக்கு மாருக, எழுதுவது போலவே பேச வேண்டும் என்று