பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாரதிக்குப் பின் மதப் பிரசுரங்களிலிருந்து தமிழ்மொழி எவ்வளவு வன்மை பொருந்தியது என்பதை அறிந்தேன். தமிழில் வசன நடை எழுதி வழிகாட்டிய பெரியார்களில் பூரீ ஆறுமுக நாவலர் முதன்மையான ஒருவர் என்று பிற்காலத்தில் எனக்குத் தெரீக வந்தது.” பின்னர், தமிழ் வசன நடை வல்லுநர்களில் ஒருவரான திரு. வி. கலியாண சுந்தர முதலியாரின் நவசக்தி' பத்திரிகையில் கல்கி உதவி ஆசிரியராகச் சேர்ந்து பணி பாத்திஆர். "திரு. வி. க. வின் நடை கடினமாய் இருந்த போதிலும் அதிலே பொருட் தெளிவு, சொல்லழகு, உணர்ச்சி விரைவு, உண்மைப் பொலிவு ஆகிய பண்புகள் உண்டு. இந்தப் பண்புகளை எல்லாந்தான் கல்கி தமது எழுத்தில் சேர்த்துக் கொள்ள முயன்ருர், அந்த முயற்சியில் மேலும் மேலும் அதிகமாக வெற்றி பெற்ருர்”. இவ்விதம், கல்கியின் வாழ்க்கை வரலாரு ைபொன்னியின் புதல்வ'னில் சுந்தா எழுதியிருக்கிருர், அதே நூலில், 'தேசியத்தால் தமிழ் எழுத்தாளராய் உருவாகிய கல்கி, தமது எழுத்தின் மூலம் தேசீயமும் தமிழும் ஒருங்கே தழைக்கச் செய்வதை ஒர் அர்ப்பணப் பணியாகக் கொண்டார். அந்தப் பணி, நவசக்தி நாட்களில் செடியாக வளர்ந்து, ஆனந்த விகடன் நாட்களில் தருவாகி வீசிக் கிளை விட்டு, கல்கிப் பத்திரிகை நாட்களில் பெரியதோர் ஆலாகப் படர்ந்தது" என்து சுந்தா குறிப்பிட்டிருப்பது சரியான கணிப்பேயாகும். - "கல்கி என்ற பெயரின் கீழ் என்ன கட்டுரை வந்தாலும் என்ன கதை வந்தாலும் யாரும் வாசியாமல் விடுவதில்.ை ஆடல் பாடல் சம்பந்தமான குறிப்புக்களைக் கச்சேரிகளில்