பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 67 மற்ற அம்சங்களில் சங்கீதம் சரியாகயிருந்தால், அங்க சேஷ்டைகளை நாம் பொருட்படுத்த வேண்டியதே இல்லை. சில சமயங்களில் அங்க சேஷ்டைகள் சங்கீதத்துக்கு ஜீவசக்தி அளிக்கின்றன என்று கூடச் சொல்லலாம். ஆகவே இராமலிங்கய்யரின் சேஷ்டைகள் மிக வேடிக்கையாய் இருப்பது பற்றி எடுத்துக் காட்டினேனேயல்லாமல், அவை களைக் குறித்துக் குறை கூறவில்லை. நான் சொல்லுவதெல் லாம், சங்கீதத்தின் ஜீவன் எதுவென்று இராமலிங்கய்யர் அறிந்து கொள்ளவில்லை’ என்பதே." எழுத்திலும் பேச்சிலும் நகைச் சுவைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்தார் கல்கி, தனி மனித வாழ்க்கையிலும் சரி, தேசிய வாழ்க்கையிலும் சரி, நகைச் சுவையானது முன்னேற்றத்துக்கு இன்றியமையாத அம்சங் களில் ஒன்ருகும் என்று அவர் வலியுறுத்தினர். ஆகவே வேடிக்கையாக எழுதி வாசகர்களைக் கவர்வதில் அவர் கருத்தைச் செலுத்தினர். உதாரணமாக இரண்டைக் குறிப்பிடலாம். கோடிக்கரைக் குழகரின் திருக்கோயில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் பாடிய நாளில் இருந்தது போலவே பெரும்பாலும் இன்றைக்கும் இருக்கிறது. நடுக்காட்டில் தன்னந் தனியாகக் குழக அாசம் செய்து கொண்டிருக் கிருர். அவரிடம் ஒட்டுக் கேட்பதற்குக் கூட யாரும் போக மாட்டார்கள். பாவம்! பின்னே மோட்சம் கேட்பதற்காக யார் போகப் போகிமுரிகள்?" - 'ஆயிரம் ஆளுலும் மாயவரம் ஆகாது என்பது மாய வரத்தில் வழங்கும் பழமொழி. இதன் உண்மையை உணர்ந்து மாயவரவாசிகள் உலர், ‘நமக்கு இந்த ஊர் ஆகாது’ என்று புறப்பட்டு விடுவது உண்டு, மாயவரம் வீதி