பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை బ్రీ இதற்கு முன்னலும், ஐந்தாறு ஸ்திரீகள் ஹைகோர்ட் டில் அட்வகேட்டுகளாகப் பதிவானதுண்டு. அவர்களால் எல்லாம் இத்தகைய கிளர்ச்சி ஏற்பட்டதில்லை. அவர்கள் தங்களுடைய மேனியின் செளந்தரியத்தையும் முக வசீகரத் தையும் பரீட்சை யென்னும் பலி பீடத்தில் பலி கொடுத்து விட்டு வந்தவர்கள். அவர்களில் சிலரைப் பார்க்கும் போது சோளக் கொல்லைகளிலே காக்காய்களைப் பயமுறுத்துவதற் காக வைத்திருப்பார்களே, அந்த உருவங்கள் ஞாபகத்திற்கு வரும், ஆளுல், பவானியோ இந்த சம்பிரதாயத்துக்கு முற்றும் மாறுபட்டவளா யிருந்தாள். அவள் ஹைகோர்ட் தாழ்வாரத்தில் நடந்து வருவதைப் பார்த்தால், யாரோ தேவ கன்னிகை தேவேந்திரனுடைய சபைக்குப் போக வேண்டியவள் வழி தவறி இங்கே வந்து விட்டதாகவே தோன்றும். அஸ்தமன சூரியனது பொன்னிறக் கிரணங் களின் நிறம் அவளுடைய மேனிநிறம், தேவலோகச் சிற்பி யினுல் ஆக்கப்பட்ட ஸ்வர்ண வீக்கிரகம் உயிர் பெற்று தடமாடுகிறதோ என்று ஒரு நிமிஷம் பிரமித்துப் போவார் கள் பவானியைத் திடீரென்று சந்திப்பவர்கள். அவள் தன்னுடைய முத்தன்ன அழகிய பற்கள் சிறிது தோன்றும் படி புன்னகை புரிந்தால், அந்த இருளடைந்த ஹைகோர்ட்டு அறைகளில் பளிச்சென்று நிலவு வீசுவது போலிருக்கும். அவளுடைய கண்களில் கூரிய வாள்கள் ஒளிவீகம்; வயிர தெஞ்சு பெற்ற பெரிய பெரிய லீனியர் வக்கீல்களின் இருதயங்களைக் கூட அந்த வாள் வீச்சுப் பிளந்து விடும்.' கல்கியின் கற்பனையும் ரசனையும் அவருடைய தமிழ் தடைக்கு விசேஷ இனிமையும் அழகும் சேர்த்திருப்பதைப் பல இடங்களில காண முடியும். பூநீமதி எம். எஸ். எஸ்ஸின் "நாரத கான இசைத் தட்டுகளைக் கேட்டு ரசித்தது பற்றி அவர் எழுதியுள்ள சில வரிகள் இதற்கு நல்ல உதாரணமாக அமையும். -