பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிக்குப் பின் 2 7 பக பத்திரிகைகள் தோன்றின. அவை மொழி வளர்ச்சிக் கும் துணை புரிந்தன. தேசீய உணர்வால் தூண்டப்பெற்று எழுத்தாளர் ஆனவர்கள் அரசியல் கருத்துக்களையும், சமூக சீர்திருத்த எண்ணங்களையும் பத்திரிகைக் கட்டுரைகளாக உணர்ச்சிகர மான நடையில் எழுதிக் கொண்டிருந்தார்கள். மேல் நாட்டுச் சிந்தனை நூல்களே நல்ல தமிழில் மொழிபெயர்த் துத் தந்தார்கள். . . துெ. சாமிநாத சர்மா இவர்களில் முக்கியமானவர். குலோவின் சமுதாய ஒப்பந்தம்', 'கார்ல் மார்க்ஸ் போன்ற நூல்கள் அவருடைய திறமைக்குச் சான்று கூறக் கூடியவை. அவரது எழுத்து நடை நல்ல உரை நடை." என்று பலப் பலராலும் பாராட்டப்பட்டதாகும். எண்ணங்கள் சீக்கிரம் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவ வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்நாட்களில் சிலர் காலணு வியிேல் பத்திரிகை பிரசுரித்தார்கள். "சுதந்திரச் சங்கு இவ்வகையில் முதன்மையானது. அதன் ஆசிரியர் சங்கு சப்ரமண்யம் வேகமும் விறுவிறுப்பும் உணர்ச்சியும் நிறைந்த நடையில் கட்டுரைகள் எழுதுவார். அவை இளைஞர்களின் உள்ளத்தைச் சுண்டி இழுத்தன. பின்னர் சுதந்திரச் சங்கு இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டது. சிறுகதைகள், சிந்தனைக் கட்டுரைகள், மொழி அனம்-இலக்கிய நயம் பற்றிய எண்ணங்கள் எல்லாம் பத்திரிகையில் இடம் பெற்றன. சங்கு சுப்ரமண்யத்தின் உரை நடை குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அதே சமயத்தில், டி. எஸ். சொக்கலிங்கம் காந்தி’ என்ற காவளுப் பத்திரிகையை நடத்தினர். பின்னர் அவர் தினமணி ஆசிரியரானர். உயிருள்ள தமிழ் தடையில் உணர்ச்சிகரமாகவும் இளமைத் துடிப்புட