தமிழ் உரைநடை
73
னும் எண்ணங்களை எடுத்துச் சொல்லும் ஆற்றல் அவருக்கிருந்தது. அரசியல் விஷயங்கள் பற்றிச் சிறு சிறு புத்தகங்களும் எழுதி வெளியிட்டார் அவர். ‘வங்கம் தந்த தங்கம்’ என்ற பெயரில் சுபாஷ் சந்திர போஸ் பற்றி சொக்கலிங்கம் எழுதிய வரலாற்றில் அவருடை உரை நடையின் சிறப்பைக் காண முடியும். பிற்காலத்தில் டி. எஸ். சொக்கலிங்கம் கதைகளும் எழுதினார்.
‘நகர தூதன்’ ஆசிரியர் திருமலைசாமியின் உரைநடை அந்தக் காலத்தில் பிரசித்தி பெற்றிருந்தது. ‘பேனா நர்த்தனம்’ என்ற தலைப்பில் அவர் வாரம் தோறும் எழுதி வந்த கட்டுரைகள் வேகம், சிந்தனை, வர்ணிப்பு, குத்தும் கிண்டல், சுளீர் சவுக்கடி எல்லாம் கொண்டிருந்தன.
நாட்டின் நிலைமை, அரசியல் பிரச்னைகள், தலைவர் வரலாறு முதலியவற்றை சுவாரஸ்யமாக எழுதி, காலணா வெளியீடுகளாக எம். எஸ். சுப்பிரமணிய ஐயர் பரப்பி வந்தார். அவருடைய உரைநடையில் எளிமையும், வேசுமும் கலந்திருந்ததோடு சொற் சாதுரியமும் நயம் சேர்த்தது. ‘காசா லேசா’ என்பார்கள் சிலர். ‘காசாலே சா’வோரும் உண்டு’—இது ஒரு சிறு உதாரணம்.)
விஞ்ஞான உண்மைகளை நல்ல தமிழ் நடையில் எடுத்துச் சொன்ன பெருமை பெ. நா. அப்புஸ்வாமி ஐயருக்கு உண்டு. அவற்றை ரசமான முறையில் இனிமையாகச் சொல்லக்கூடிய ஒரு நடையை அவர் வளர்த்து வந்தார். “அற்புத உலகம்” ‘விஞ்ஞானத்தின் விந்தைகள்’ போன்ற அவருடைய ஆரம்பகால நூல்கள் இதற்கு உதாரணமாக அமையும்.
தி. சே. செள. ராஜன் தமது அரசியல் அனுபவங்களையும், வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறர்.
பா—5