76
பாரதிக்குப் பின்
பார்த்து சாரம் கட்டிவிட்ட மாதிரி புருவம்; மல் வேஷ்டி, கிட்டித் துண்டு, ஐந்து பெண்கள், பதினைந்து ரூபா சம்பளம், கல்லத்தி முடுக்குத் தெருவில், வறுமையின் இருளடித்த ‘கர்ப்பக்கிருகம்’—இவர்தான் சாமி சிவசிதம்பரம் பிள்ளை. லேயன்னா மேனா வீனா ஜவுளிக் கடையில் அவருக்கு சேவகம். பட்டணத்திலே அந்தக் காலத்தில் குண்டு விழுந்தபோது, முறிந்து மூடிய ஜவுளிக்கடை ஒன்றின் ‘ஸ்பிளிண்டர்ஸ்களாக’ திருநெல்வேலி மேற்று ரத வீதியில் வந்து விழுந்தார். அன்று விழுந்த இந்த சதைப் பிண்டம், இன்றும் நாடியின் தாள அமைதி குன்றாமல் அடித்துக் கொண்டிருக்கிறது. அவர் மாறியது கிடையாது. அவரது குடும்பமும் மாறியது கிடையாது. அவருடைய சேவகமும் மாறியது கிடையாது.” (சிவசிதம்பர சேவுகம்)
எதையும் பதுமையாக எடுத்துச் சொல்ல விரும்பிய சொ. வி. ஆங்கிலச் சொற்களை ஆங்காங்கே தாராளமாகக் கையாண்டார். தமிழ் உரைநடையில் புதுமைகள் பண்ணுவதற்காகவும் தனி நயங்கள் சேர்ப்பதற்காகவும் ஆங்கில வாக்கிய அமைதிகளை அவர் எடுத்தாண்டார். ‘காம்பவுண்ட் சென்டன்ஸ்’, ‘காம்ப்ளெக்ஸ் சென்டன்ஸ்’ என்று சொல்லப்படுகிற முறைகளைத் தமிழிலும் அவர் பிரயோசிக்கத் தயங்கவில்லை. வாக்கியங்களுக்கு மடுக்கும் எடுப்பும் தந்தன அவை.
சொ. விருத்தாசலம் எழுதிய ‘பேசிஸ்ட் ஜடாமுனி’ என்ற, இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முஸொலீனியின் வாழ்க்கை வரலாற்றின் ஆரம்பம் இதற்கு நல்ல உதாரணமாக அமையும்.
“கிறிஸ்து முனி பிறந்த பின் 1936 வருஷங்கள் கழித்து மே மாதம் 5–ந் தேதி மாலை 7–30 மணிக்கு...
அதாவது, அந்த மகானின் உபதேசங்கள் யாவும் வேரூன்றி, பரந்து, தழைத்து—ஆனால், மனித நினைவைவிட்டு அகன்றுபோகப் போதிய காலம் கடந்து...