உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் உரைநடை

77

அந்த மகானின் சீடன் பேதுரு—‘கால தேவனின் பார்வையால் சலியாத குன்று’ என்று பரிவுடன் அழைக்கப்பட்ட பேதுரு—நம்பிக்கையின் அஸ்திவாரத்தையிட்ட அந்த நகரத்திலேயே...அதே ரோமாபுரியிலே...

மனித வம்சத்தின் அதிகார உன்மத்தத்தையும், தியாகத்தின் வரம்பையும், குறுகிய நோக்கத்தின் குரூரத்தையும், பூசாரித்துவத்தின் சேவையையும், கொலை வெறியையும், சிறப்பையும் சிறுமையையும் கண்டு சகித்துச் சகித்து, ஆயிரக் கணக்கான வருஷ அளவுள்ள மனித நாடகத்தின் படுதாவாக விளங்கும் அந்த நகரத்திலே...

சர்வாதிகாரியின் ‘பலாஜா வெனிஜியா’ என்ற அரசாங்க மாளிகையில்...

மேடையில் பேஸிஸ்ட் துவஜம்—கண்ணைப் பறிக்கும் மின்சார விளக்குகள்...

கீழே சதுக்கத்திலும், வீதியிலும் ஜனசமுத்திரம்—உற்சாக வெறியில் தலைதெறிக்கக் கோஷமிடும் மனிதக் கும்பல்...தூரத்திலே தெரியும் கொலீஸியம் வரை இப்படித்தான்.

கூட்டத்தில் குழந்தைகள் நசுங்குகின்றன. போலீஸார் பாய்ந்து மீட்கின்றனர். கூட்டத்தைச் சமாளிக்க முயலுகின்றனர். மக்கள் அரசாங்கத்துடன் ஆனந்தத்தில் லயிக்கும் பொழுது ‘அதிகார’த்திற்கு அதிகாரமேது?”

சொல்கிற விஷயத்துக்கு அதிகமான தெளிவும் அழுத்தமும் கொடுப்பதற்காகவும், ஒரு எண்ணத்தைக் கூறிச் செல்கையில் கிளைவிடுகிற வேறு எண்ணத்தை ஊடே குறித்து வைக்கவும், ஆங்கில வாக்கிய அமைப்பில் கையாளப் படுகிற Parenthesis என்கிற இடைவாக்கியம் அல்லது உபவாக்கியம் இணைப்பதை—இருபுறமும் கோடு–