பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む பேராசிரியர் டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் பயனுள்ள சில தகவல்களை அறிவித்தார்கள். "தமிழ் இலக்கிய வரலாறு பட்டப் படிப்புக்கான பாட மானதன் பின்னர் வெளிவந்துள்ள பாட நூல்களில் இவ் விடயம் பற்றிப் பேராசிரியர்கள் பலர் எழுதியுள்ளனர். ஆளுல், அவற்றைவிட, அத்தகைய நூல்கள் பல தோன்லு வதற்கு முன்னரே எழுதப் பெற்றுள்ள நான்கு முக்கிய ஆக்கங்கள் உள்ளன. - தமிழ் உரைநடை வரலாறு பற்றி ஆங்கிலத்திலே தனி ஆய்வுகளாகவும், தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் அத்தியாயங்களாகவும் பல முக்கிய ஆக்கங்கள் உள்ளன. அவை பற்றி எதுவும் குறிப்பிடாது, தமிழில் தமிழ் உரை நடை பற்றி எழுதப்பட்டுள்ளனவற்றுள் மிக முக்கிய மானவையாகவும், ஆராய்ச்சியாளர்களால் இட்டாயம் கவனத்திற் செடுத்துக் கொள்ளப்பட வேண்டியவையென தான் கருதும் நான்கு ஆய்வுகள் பற்றி எடுத்துக் கூற விரும்புகிறேன். - 1. செல்வநாயகம் வி.-'தமிழ் உரை நடையின் வரலாறு', சாரதா விலாஸ் பிரஸ், கும்பகோணம். 1957 தமிழ் உரைநடை வரலாற்றினை முற்று முழுதாக எடுத்துக் கூற முனையும் இந்நூல் இலங்கையிற் பரவலாகக் கிடைக்கும். (இந்தியாவில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற் பெறப்படலாமென நூலிற் குறிப்பிடப்பட்டுள்ளது.) 2. சுப்பிரமணிய அய்யர், ஏ. வி.-'தமிழ் ஆராய்ச்சி யின் வளர்ச்சி (பண்டைக் காலமும் இடைக் காலமும்). அமூத நிலையம், சென்னை 1959. 3. வேங்கடசாமி, மயிலை, சீனி-பத்தொன்பதாம் காற்ருண்டில் தமிழ் இலக்கியம், (1800-1900), சாத்தி நூலகம், சென்னை, 1962, 4. அழகிரிசாமி. கு-வழிவழி வந்த வசன நடை: (தொகுப்பு பக். 279-335. தமிழ் வட்டு இரண்டாவது ஆண்டு விழா மலர், சென்னே 1969,