பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிக்குப் பின் என்பதைப் புதுமைப்பித்தனின் அன்று இரவு, காஞ்சனே, செல்லம்மா, சாப விமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ஆகிய கதைகள் நிரூபிக்கின்றன. இவை 1940 களில் எழுதப்பட்டவை. புதுமைப்பித்தன் ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதிஞர் என்பது ஆதாரமில்லாத வெறும்பேச்சு. அவர் ஆங்கில வாக்கிய அமைப்பு முறைகளே புதுமைக்காகவும்,சிலசமயம் வாசகனை சிரமப்படுத்த வேண்டும் என்று கூடநடைநேர்த்திக்காகவும் கையாண்டாரே தவிர அவருடைய எண்ணங்கள் தமிழ் மண்ணில், தமிழ் நாட்டு மக்கள் வாழ்க்கையிடையே வேரூன்றி மேலெழுந்தவையே யாகும். எந்தக் கதையிலிருந்தும் இதற்கு உதாரணங்கள் காட்ட முடியும். “தம்முடைய தகப்பஞர் வழிப் பாட்டன் பேரில் இந்தப் பெயரை முன்னிட்டு வெறுப்பு ஸ்திரப்பட்டது. "மாட்டுக்குப் பருத்தி விதை வச்சியா, வண்டியை இழுத்துக் குறட்டு ஓரமாக விட்டு விட்டு, போயி சுப்பையாத் தேவனைச் சத்தங்குடுத்துவிட்டுவா’ என்று அதிகாரம் செய்வோரிடம், இடுப்பில் துண்டை வரித்து கொண்டு கும் பிக்கொதிப்பை ஆற்றிக் கொள்ள முயலும் ஜீவன்களுக்குப் பலவேசம் என்ற பெயர் இருந்தால் முழுவதும் பொருத்தமாக இருக்கும். அன்று, சென்ற யுகம் என மனக்குறளி காலநிர்ணயம் செய்யக் கூடிய ஒரு காலத்தில் தகப்பளுருடைய சுண்டு விர லேப் பிடித்துக் கொண்டு அம்பாசமுத்திரம் உயர் தரப் பாடசாலைத் தலைமை ஆசிரியர் முன்பு, சிவப்பு உல்லன் குல்லாவுக்கு வெளியில் நாய் வால் மாதிரி நீட்டிக் கொண்டிருந்த வாழை நார் முடிப்புச் சடையும், எண்ணெய்க் கசடு வழியும் நெற்றியில் சாந்துப் பொட்டும். காதில் தட்டும், பச்சைக் கோட்டும், பிறந்தநாளுக்கு ஆச்சி வாங்கித் தந்த ஜரிகைக் கரை நீலப்பட்டு வேட்டியும்