பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடை 畿 இப்படி தேரான தடையில் அழகாக அடுக்கிச் செல்லும் பு. பி., சிக்கல்களும் பின்னல்களும் கொண்ட சொற்கோலம் தி திலும் ஆர்வம் காட்டிஞர். "சாளரவரம்புக்கு உட்பட்ட தாரகைகள் ஒன்று இரண்டு, தீர்க்கதரிசிகளின் அறிவு வரம்புக்குள் அடைபட்ட பிரபஞ்ச ரகசியங்கள் ஒரு குறிப்பிட்ட கோலத்தில் அமைந்து, மனித உயிர் நாடும் வேட்கைக்குச் சாந்தி தரும் சமயம் என்ற ஒரு குறிப்பிட்ட கோலத்தைக் காட்டுவது போல, ஜோதிட விற்பன்னர்கள் வகுக்காத ராசி மண்டலங்களை அமைத்துக் காட்டியது.” (அன்று இரவு, "மாதம் முழுதும் தவனே வாரியாகத் தேவைகளைப் பிரித்து, ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக முளைத்த வேறு ஒன்றுக்காகச் செலவழித்து விட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன், பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனே பாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காண முடியாத பால் வனத்தைப் பாசனம் செய்ய, தவணே என்ற வடிகால்களை உபயோகிக்கிருர் .” (செல்லம்மான்) புதுமைப்பித்தனின் வாழ்நாளில் அவருடைய கடைசிச் சிறுகதையாக கயிற்றரவு பிரசுரமாயிற்று. ஒரு மனிதனின் எண்ண ஓட்டத்தையும், அவன் வாழ்விலும் அவனது சுற்றுப்புறங்களிலும் காலம் திகழ்த்திய சித்துகளையும் குறித்து அவன் நினைப்பதையும், அவனுடைய முடிவையும் இக் சுதை வர்ணிக்கிறது. இதில் பெரும் பகுதி ஸ்ட்ரீம் ஆஃப் கான்ஷியஸ்னஸ் (தனவோட்டம்) முறைப்படி எழுதப்பட்டுள்ளது. -